பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




258

அப்பாத்துரையம் - 12

முதலில் ஓராண்டுத் தவணையிலும், அடுத்து ஆறுமாதத் தவணையிலும் அந்தக் காலம் நீடிக்கப் பெறலாம்.

மேல் மன்றத்தில் 250 உறுப்பினர் உண்டு. இவர்களுள் 15 பேர், குடியரசுத் தலைவரால் அமர்வு பெறுகின்றனர்; மற்றவர். தனியரசுகளின் சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் இவர்களுள் ஆண்டுதோறும் மூன்றிலொருபங்கு தொகையினர் விலக, அவ்விடங்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும்.

மக்கள் மன்றத்தின் உறுப்பினர் 500 பேர். இவர்கள் மாநில முழுதும் பரந்த தேர்தல் தொகுதிகளால் தேர்ந்தெடுக்கப்படு கின்றார்கள். மாநிலத்தின் வயது வந்த எல்லா மக்களும் இதன் தேர்வுரிமையில் பங்கு கொள்கின்றனர். அவர்களுள் ஒவ்வோர் உறுப்பினரும் 5 லட்சம் அல்லது 71/2 லட்சம் பேர்களுக்கு ஒருவர் வீதம் பிரதிநிதியாவர்.

மாநில நடைமுறை ஆட்சி முழுவதற்கும் பொறுப்பு வகிக்கும் தனி மனிதர் குடியரசுத் தலைவரே. இவர் ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப் படுகிறார். இவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழுவில் மாநில மன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அனைவரும் பங்குகொள்வர். தலைவரே அமைச்சவையின் துணைகொண்டு நாட்டை ஆளும் பொறுப் புடையவர் ஆவர். மேலும், அவரே தனியரசுகளின் ஆட்சித் தலைவர்களையும், கூட்டுறவு நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளையும், வெளிநாட்டுத் தூதுவர்களையும், அமர்வுக்குரிய மாநில மேல்மன்ற உறுப்பினரையும் தெரிந்தெடுப்பவர்.

நெருக்கடிக் காலங்களில் தலைவர் தனியரசுகளில் நேரடியாட்சி நடத்தவோ, மாநில முழுதும் அடிப்படை மனித உரிமைகளை ஒத்தி வைக்கவோ, அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கவோ உரிமையுடையவர். மன்ற இடைக்காலங்களில் தற்காலகச் சட்டம் பிறப்பிக்கும் உரிமையும் அவருக்கு உண்டு. அத்துடன் அவரே பாதுகாப்புப் படைகளின் உயர்தனித் தலைவரும் ஆவார்.

தலைவர் இல்லாதபோது அவர் உரிமைகளைத் துணைத் தலைவர் மேற்கொண்டு செயலாற்றுவார். அவர் மாநில மன்றங்கள் இரண்டிலும் கூட்டாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.