பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

7

நாட்டின் நல்லறிஞர்கள்- நாட்டுத் தலைவர்கள்- கனவிற் கண்டுள்ளார்கள். அக்குறிக்கோளையும் அக்கனவையும் நாம் நம் வருங்கால வாழ்க்கையின் ஒரு பகுதி ஆக்க வேண்டும். குறிக்கோள் நமக்கு நெறி காட்டும் ஒளி விளக்காக இருக்க வேண்டும்; கனவு நனவாகி, நம் வாழ்வை வளப்படுத்த உதவ வேண்டும். இது நம் முயற்சியைப் பொறுத்தது; நம் அறிவாற்றலையும், நற்பணியையும் பொறுத்தது.

விடுதலை விழா

1947-ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள், 15-ஆம் நாளைக்கு முந்திய நள்ளிரவுடன் இந்திய மாநிலம் விடுதலை பெற்று விட்டது. அயலாட்சியாகிய பிரிட்டிஷ் ஆட்சிக்கு நாம் அன்று விடை கொடுத்தனுப்பி விட்டோம். மாநிலத்தின் ஆட்சி நம் மாநிலத்தின் கைக்கு வந்துவிட்டது. ஆண்டுதோறும் இந்நாளையே நாம் விடுதலை விழாவாகக் கொண்டாடுகிறோம்.

விடுதலைப் போராட்டத்தின்போது விடுதலையே நம் குறிக்கோளாய் இருந்தது. நம் தலைவர்களின் குறிக்கோளும் அதுவே. நம் முயற்சிகளாலும் நம் தலைவர்களின் முயற்சிகளாலும் நாம் வெற்றி பெற்றுவிட்டோம்! இனி நம் குறிக்கோள் யாது? விடுதலை வீரராகிய நாம், இனி எதை நோக்கிச் செல்வது? எதற்குப் பாடுபடுவது?

விடுதலைக் குறிக்கோள் நாட்டு விடுதலையுடன் நின்று விடாது. உலக வரலாறு இதை நமக்கு நன்கு எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில், விடுதலை நாடுகளிலும் விடுதலை இயக்கங்கள் நடைபெற்றிருக்கின்றன; நடைபெறுகின்றன. விடுதலையற்ற அடிமை நாடுகளில், ஆளும் நாடு வேறு; ஆளப்படும் நாடு வேறு. ஆளும் நாட்டுக்கு உரிமை உண்டு; ஆளப்படும் நாட்டுக்கு உரிமை இல்லை; கடமை மட்டுமே உண்டு. உரிமை யில்லாத இக்கடமையையே நாம் அடிமை என்கிறோம். அயலாட்சியாகிய பிரிட்டிஷ் ஆட்சியால் இந்தியாவுக்கு இருந்த நிலை இதுவே. ஆனால், விடுதலை நாடுகளில் இந்த நிலை இருக்க முடியாது.

விடுதலை நாடுகளில் ஆளும் நாடும் ஆளப்படும் நாடும் ஒன்றே. ஆயினும், இங்கேயும் ஆள்பவர், ஆளப்படுபவர் என்ற