இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
259
மேலும், அவரே நடுவரசின் மேல் மன்றத்துக்குத் தலைவரும் ஆவார்.
மாநில நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியும் அவருடன் ணை நீதிபதிகளாக' எழுவரும் இருப்பர். நடுவாட்சி, தனியரசுகள் ஆகியவற்றுக் கிடையேயுள்ள வழக்குகள், அரசியலமைப்பு முறை, சட்டங்களின் உரை விளக்க மாறுபாடு ஆகியவை பற்றிய வழக்குகள், அடிப்படை மனித உரிமைகள் பற்றிய முறையீடுகள் ஆகியவற்றில் இக்கூட்டுறவு நீதிமன்றம் தனிப் பொறுப்புடையது. தவிர, உயர்நீதி மன்றங்களிலிருந்து மேல் முறையீடுகளுக்கு இணக்கமளிக்கும் உரிமையும் இதற்கு உண்டு.
தனியரசுகள்
இந்தியக் கூட்டுறவில் உட்பட்ட தனியரசுகள் ஏ,பி,சி என்ற மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ வகுப்பு அரசுகள் பிரிட்டிஷ் ஷ் ஆட்சியின்போது ஆட்சித் தலைவர்களால் ஆளப்பட்ட பெருமாகாணங்களே. இவற்றைக் குடியரசுத் தலைவரால் அமர்வுபெற்ற ஆட்சித் தலைவரே ஆள்கின்றனர். பி வகுப்பு அரசுகள், மன்னர் தனியரசுகளில் பெரியனவும் சிறியவற்றின் தொகுதிகளுமாக வகுக்கப்பட்டவை. இவற்றின் ஆட்சி பழைய மன்னர் மரபில் முக்கியமான ஒருவரிடமே விடப்பட்டுள்ளது. இவர் அரசு முகவர் (ராஜபிரமுகர்) எனப்படுவர். குடியரசமைப்பில் இவர் ஒருவரே குடிமரபாக உரிமை பெறுபவர். சி வகுப்பு அரசுகள் முன்பு துணையாட்சி யாளர்கள்2 ஆட்சியிலுள்ள சிறு மாகாணங்கள் அல்லது நடுவரசின் நேரடியான ஆட்சியிலுள்ள பகுதிகள் ஆகும். இன்னும் அவை கிட்டத்தட்ட முன்னைய நிலைமையிலேயே உள்ளன.
ஏ வகுப்பு அரசுகளில் பெரும்பாலும் இரண்டு மன்றங்கள் உண்டு; முழுப் பொறுப்பாட்சியும் உண்டு. பி வகுப்பிலும் பொறுப்பாட்சி வகுக்கப் பட்டுள்ளது. சி வகுப்பிலும் அதை நோக்கிய வளர்ச்சி தொடங்கியுள்ளது.
ஏ வகுப்பைச் சார்ந்த அரசுகள் ஒன்பது. அவையாவன: சென்னை, ஒரிஸா. பீஹார், மேற்கு வங்கம், அஸ்ஸாம், வட அரசு (உத்தரப் பிரதேசம் அல்லது பழைய ஐக்கிய மாகாணம்).