(260) ||-
அப்பாத்துரையம் - 12
கிழக்குப் பஞ்சாபு, பம்பாய், நடுவரசு (மத்தியப் பிரதேசம் அல்லது பழைய மத்திய மாகாணம்) ஆகியவை. பி வகுப்பில் ஹைதராபாது, ஜம்மு, காஷ்மீர், மத்திய பாரதம், மைசூர் பாட்டியாலா கிழக்குப் பஞ்சாபு அரசுகள், ராஜஸ்தான், சௌராஷ்டிரம், திருவாங்கூர் -கொச்சி, விந்திய அரசு (விந்திய பிரதேஷ்) ஆகிய ஒன்பது அரசுகளும் இடம் பெறுகின்றன. சி வகுப்பில் ஆஜ்மீர், போபால், பிலாஸ்பூர், கூச்பீஹார், குடகு, தில்லி, இமாசல அரசுகள் (ஸிம்லா மலை அரசுகள்), கச்சு, மணிபுரா, திரிபுரி ஆகிய பத்து அரசுகள் உண்டு. தலைநிலங் கடந்த அந்தமான் - நிக்கோபார் தீவுகளும், இந்தியாவின் பகுதியாக இவற்றுடனே சேர்க்கப்பட்டுள்ளன. இதைச் சேர்த்துத் தனியரசுகள் மொத்தம் 29 ஆகும்.
தனியரசுகளின் சட்டமன்ற உறுப்பினர் தொகையில் மேல் மன்றத்தின் உறுப்பினர், நாலில் ஒரு பங்கினராய் இருப்பர். இவர்களில் 6ல் ஒரு பங்கினர் ஆட்சித் தலைவரால் அமர்வு பெறுவர். மற்றும் மூன்றில் ஒரு பங்கினர், ஒற்றை மாற்று மொழியுரிமைப்படி சட்டமன்றத்தால் தெர்ந்தெடுக்கப்பெறுவர். மிச்சமுள்ளவருள் பாதிப் பேர் பல்கலைக்கழகத்தார், பள்ளி ஆசிரியர் முதலிய தனித்துறைத் தகுதியுடையவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தனியரசுகளின் சட்டமன்ற உறுப்பினர் அறுபதின்மருக்கு மேற்பட்டும் முந்நூற்றுவருக்கு மேற்படாமலும் இருப்பர். இவர்கள் மக்கள் தொகையில் ஒரு லட்சத்துக்கு ஒருவர் வீதம் கணக்கிடப்படுவர். உறுப்பினர் 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடையவராயிருக்க வேண்டும். தேர்வு, ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடைபெறும். இதன் கூட்டம், குறைந்த அளவு, ஆண்டுக்கு இரு முறை நடைபெற வேண்டும். அவற்றின் இடைக்காலம், ஆறு மாதத்திற்கு மேற்படக்கூடாது.
மன்ற நடைமுறைகள் பெரிதும் பிரிட்டிஷ் மன்றங்களையே முன் மாதிரியாகக் கொண்டவை.
தனியரசுகள் அல்லது பழைய மாகாணங்களின் பகுதிகள் மாவட்டங்கள் ஆகும். முகலாய ஆட்சிக் காலத்திலிருந்தே இவைதாம் இந்திய ஆட்சிகள் மூல தளங்களாய் இருந்து வருகின்றன. தொடக்கத்தில் வாணிகக் கழக ஆட்சியில் வரி