பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

(261

விதிக்கும் பணியாளராக மாவட்டத் தலைவர் கருதப்பட்டு, வரி முதல்வர்' என்ற பெயர் வழங்கப்பட்டிருந்தார். பிரிட்டிஷ் வாணிகக் கழகம் ஆட்சியுரிமைகளை ஒவ்வொன்றாகப் பெறுந்தோறும் நீதியும் மற்றப் பல துறைகளும் அவரிடமே டப்பட்டன. சில மாகாணங்களில் வரி முதல்வர் என்ற பெயரினிடமாகத் துணையாணையாளர் என்ற பெயர் நிலவுகிறது. இச்சிற்றரசுப் பதவி இன்னும் முற்றிலும் அகற்றப்படவில்லை. ஆயினும், காவல்துறைத் தலைவராக ஒரு காவல் மேலாளரும்2, கல்வித்துறையில் ஒரு மாவட்டப் பள்ளி மேலாளரும்', மருத்துவத் துறைக்கு ஒரு மாவட்ட மருத்துவ மேலாளரும் அவருடன் மாவட்டப் பொறுப்பில் பங்கு கொண்டுள்ளனர். வரித்துறைக்குப் புறம்பாக நீதித்துறை ஒன்று மட்டுமே இன்னும் வரி முதல்வரிடம் உள்ளது.

4

6

பிரிட்டிஷ் ஆட்சியில் ரிப்பன் பெருமகனார் காலத்திலிருந்து மாவட்டங்களிலும் முக்கிய மாநகரங்களிலும் பல முக்கியச் சிற்றூர்களிலும் சிறுதிணைத் தன்னாட்சி நடைபெறுகின்றது. மாவட்டங்களில் அவை மாவட்டக் குழு என்ற பெயருடன் கல்வி, மருத்துவம், உடல் நலம் ஆகியவற்றில் கருத்துச் செலுத்துகின்றன. மாநகரங்களிலும் பல நகரங் களிலும் வயது வந்தவர் தேர்வுரிமையுடைய நகரமன்றங்கள் நடை பெறுகின்றன. முக்கியமான சிற்றூர்களில் இவை பஞ்சாயத்துக்களாகச் செயலாற்றுகின்றன. இத்துறை முற்றிலும் மாகாண அரசு அல்லது தனியரசுக்கு உட்பட்டவை.

வெளிநாட்டுத் தொடர்பு

மாநிலம் விடுதலை பெற்றுக் குடியரசானபின் ஏற்பட்ட முதல் அரசியல் கொள்கைச் சிக்கல் பிரிட்டிஷ் பேரரசின் போது உருவாகிய பொது அரசியல் இந்தியா உறுப்பாயிருக்க வேண்டுமா, வேண்டாவா என்பது பற்றியதே. இந்தியாவுக்கத் தரப்பட்டிருக்கும் விடுதலை, உண்மையில் முழு விடுதலை உரிமைதான் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், பிரிட்டிஷ் மன்றம் 1947 சட்டப்படி இந்தியா மீதுள்ள தன் உரிமைகள் எல்லா வற்றையும் விட்டுக் கொடுத்துவிட்டது. அத்துடன் பொது அரசில் இருப்பதா, வேண்டாவா என்பதை முடிவு செய்யும்