இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
(263
ஒருதிற எதிர்ப்பை வலுப்படுத்தும் முயற்சியில் கலக்காமல், இந்தியா தன் நடுவு நிலைமையைக் காத்துக்கொண்டது. அத்துடன் போர்க்கள எல்லையை வரையறுக்கும்படியும், புதிய செஞ்சீனாவைப் பழைய சீனாவின் இடத்தில் உலக நாடுகள் அமைப்பில் சேர்த்துக் கொள்ளும்படியும் இந்தியா அறிவுரை தந்தது. இது நல்லறிவுரை என்பதைப் பின்னால் ஏற்பட்ட குருதிக்களம் உலகுக்கு நன்கு எடுத்துக் காட்டிற்று.
குரல்
-
நடுவுநிலை காரணமாக இந்தியாவின் கொள்கையைச் செயலற்ற கொள்கை என்று கூறிவிடவும் முடியாது. தாழ்த்தப்பட்ட- அமுக்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்டமக்கள் எங்கிருந்தாலும், இந்தியா அதற்கு வலுத்தரத் தயங்கவில்லை. ஆசியாவில் இந்தோனேஷியர் விடுதலையிலும், ஆப்பிரிக்காவில் இத்தாலியர் குடியேற்றங்களின் விடுதலையிலும் அது பெரிதும் அக்கறை காட்டிற்று. செஞ்சீனாவை வரவேற்க முன் வந்த அரசுகளில் புதிய இந்தியாவே முதலிடம் வகித்தது. ஆனால், உலகெங்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபடும் இந்திய மக்களே ஆப்பிரிக்காவிலும், இலங்கை, மலேயா ஆகிய நாடுகளிலும் துன்பத்துக்கும் உரிமைக்கேட்டுக்கும் ஆளாகி யுள்ளனர். ஆப்பிரிக்கா வகையில் அது உலகநாடுகள் அமைப்பிலேயே இந்திய மக்களுரிமைகளுக்காகவும், ஆப்பிரிக்கப் பழங்குடியின் உரிமைக்காகவும் போராடி வருகிறது. இலங்கை, மலேயா வகையிலும் அது அவ்வப்போது, அவ்வந்நாட்டு அரசியல்களுடன் பேரம் நடத்தி வருகிறது.
புதிய இந்தியக் குடியரசு, உலக அரசுகளிடையே நேசமும் நட்பும் கொண்டாடி வருகிறது. உலகின் மிகப் பெரும்பாலான நாடுகள் அதனுடன் தூதர் நிலையத் தொடர்புகளும், அரசியல், வாணிக,பண்பாட்டுத் தொடர்புகளும் கொள்ள விரைந்துள்ளன.
உலக அரசியல் வானில் புதிய ஒளிக்கோளமாகத் தோன்றிய இந்தியக் குடியரசுக்கு எல்லா உலக நாடுகளும் ஆர்வத்துடன் வரவேற்பளித்துள்ளன.
பிரிவினையின் விளைவுகள்: அகதிகள் துயர்
புற உலகில் ஏற்பட்ட இப்புகழுக்கும் நேச அமைதிக்கும் மாறாக, விடுதலை இந்தியாவின் தாயக எல்லையிலேயே