பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

பாகிஸ்தான்

பகுதியில்

முஸ்லிம்கள்

(265

இதற்கெதிரான

ரு

பழிச்செயலில் ஈடுபட்டனர். இதே நிலை வங்கத்திலும் இந்து முஸ்லிம்களிடையே ஏற்பட்டது. மக்கள் வெள்ளம் இரு மாகாணங்களிலும் இருபுறமிருந்தும் எல்லை தாண்டி ஓடும் இடையறாத இரண்டு பேராறுகளாகப் பாய்ந்தது.

இக்குடிப் பெயர்ச்சியில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குப் பல இன்னல்களுக்காளாகி ஓடி வந்த மக்கள் தொகை 85 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இவர்களுள் மேற்குப் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் தொகை 50 லட்சமும், கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் தொகை 35 லட்சமும் ஆகும். கிட்டத்தட்ட இதிற் சற்றுக் குறைந்த அளவுள்ள மக்கள் இந்தியாவிலிருந்து இரு பாகிஸ்தான்களுக்கும் சென்றனர். இரு புறங்களிலும் வழியில் கொலை, கொள்ளை ஆகிய தொல்லைகளுக்காளாய் இறந்தவரும், காயம்பட்டவரும், குற்றுயிராய் நாடுவிட்டு நாடுசென்றவரும் பெருந்தொகையினர் ஆவர். இறந்தவர் தொகை மட்டும் மொத்தம் 20 லட்சத்துக்கு மேற்பட்டது என்று அறிகிறோம்.

பிரிவினையால் ஏற்கெனவே இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு, தொழில் மந்தம் ஆகிய தீங்குகள் ஏற்பட்டிருந்தன. பிரிவினைக்கு முன் இருந்த மக்கள் தொகையில் பிரிவினைக்குப் பின்னுள்ள இந்தியாவில் 100க்கு 82 பேர் இருந்தனர். ஆனால், பாசன நிலங்களில் இப்போது இந்தியாவில் இருந்தது 100க்கு 69 வீதமே. இவ்விழுக்காடு அரிசி வகையில் 100க்கு 68 ஆகவும், கோதுமை வகையில் 100க்கு 65ஆகவும் இருந்தது. தவிர, தொழிற் சாலைகளில் பெரும்பகுதி இந்தியாவின் பக்கமே இருந்தாலும், அதற்கு மூலப்பொருள்களான பருத்தியும் சணலும் பிற பொருள்களும் பெரிதும் பாகிஸ்தானிலேயே சேர்ந்து விட்டன. உணவு வகையிலும் தொழில் மூலப்பொருள் வகையிலும் விடுதலை இந்தியாவில் இதன் பயனாக நெருக்கடி ஏற்பட்டிருந்தது. குடிபெயர்ச்சி இத்தொல்லைகளைப் பன்மடங்கு பெருக்கிற்று.

குடிப்பெயர்ச்சியால் ஏற்பட்ட இன்னல்கள் இரு அரசு களுக்கும் பொதுவாகத் தோற்றினாலும், உண்மையில் அது ந்தியாவையே பெரிதும் பாதித்தது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஓடிச் சென்ற முஸ்லிம்களில் பெரும்பான்மை