பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

மன்னர் அரசுகள்: ஹைதராபாது, காஷ்மீர்

(267

குடிபெயர்ச்சிக்கு அடுத்தபடி குடியரசின் வாழ்வுக்கு இடையூறு விளைவித்த செய்தி மன்னரசுகள் பற்றியதேயாகும். பிரிவினைக்கு முன்பே ஒரு சில தனியரசுகள் பிரிட்டிஷ் இந்தியாவும் கண்டு பொறாமைப்படும் அளவு வாழ்க்கை முன்னேற்றமும் நல்லாட்சியும் பெற்றிருந்தன. திருவாங்கூர், மைசூர், பரோடா என்பவை இதற்குச் சான்றுகள். இவை முன்மாதிரி அரசுகள் என்று சிறப்பிக்கப்பட்டிருந்தன. ஆனால், பொதுவாக மன்னர் ஆட்சிகள் மிகவும் பிற்போக்கான எதேச்சாதி காரங்களாகவே இருந்தன. மன்னர் நாடுகளின் குடிமக்கள் வாழ்விலும், அரசியல் முன்னேற்றத்திலும் விடுதலைக்காகப் போராடிய பேரவை ஆர்வம் காட்டிற்றாயினும், அதில் மிகுதியும் ஈடுபட முடியவில்லை. எனினும், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் மன்னர் அரசுகளின் குடிகள் ஒதுங்கியிருக்க வில்லை. பல இடங்களில் குடியாட்சிக் கிளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தன; பேரவையின் கிளர்ச்சியில் வந்து கலந்து கொண்டவரும் பலர். காந்தியடிகளும் பிற பல தலைவர்களும் உண்மையில் இத்தகைய மன்னரசுக் குடிகளிடையே இருந்து வந்தவர்களே.

மன்னர் பலர், பிரிவினைக்கு முன்பே கால நிலை அறிந்து புதிய இந்திய அரசுடன் செயல் நிறுத்த ஒப்பந்தங்கள்' ஏற்படுத்திக்கொண்டிருந்தனர். விடுதலையின் பின் மன்னர் அரசுகள் இந்திய அரசியல் சட்டத்தின் வாசகங்கள் தந்த உரிமைப் படி இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றில் எதனுடனாவது தம்மிச்சைப்படி சேரலாம். இவற்றுள் மிகப் பெரும்பாலான அரசுகள் எளிதாக இந்தியாவுடன் இணைவதற்கு ஒப்புதல் தெரிவித்தன. இவற்றைக் கவனிக்க விடுதலை அரசியலில் மன்னர் அரசுத் துறை ஒன்று 1947, ஜூலை 25இல் வகுக்கப் பட்டிருந்தது. உள் நாட்டமைச்சராகிய சர்தார் பட்டேலின் மேற்பார்வையில் திரு.கே.பி. மேனன் அத்துறையைக் கவனித்து வந்தார்.

மன்னர் அரசுகளில் இரு வகையான தொல்லைகள் ஏற்பட்டன; ஒன்று, ஜூனகாது, ஹைதராபாது, காஷ்மீர் என்னும் அரசுகள் இந்தியாவுடன் இணையும் வகையில் காட்டிய தயக்க நிலையின் விளைவு; மற்றொன்று, மக்கள் நலனையும்