268
அப்பாத்துரையம் - 12
இந்தியாவின் ஆட்சி ஒற்றுமையையும் பேணும் வகையில் எல்லா வகைப்பட்ட மன்னரையும் ஒருங்கிணைத்து ஒரு திட்டத்தை ஏற்கும்படி செய்வதில் ஏற்பட்ட சிக்கல் நிலை.
ஜூனகாதும், ஹைதராபாதும் இந்தியாவினுள் இருந்தும் முஸ்லிம் மன்னரால் ஆளப்பட்டன. ஜூனகாது மன்னர், தம் குடி மக்களின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல், பாகிஸ்தானுடன் சேர்வதாக அறிவித்தார் ஹைதராபாது நிஜாமும் அதுபோல மக்கள் கருத்துக் கோராமல் தம்மிச்சைப் படி தனியுரிமை பெறவும் பாகிஸ்தானுடன் இணையவும் விரும்பினர். இந்திய அரசாங்கம் அவர்கள்மீது உள்நாட்டுப் போர் நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது. ஜூனகாது சில மணிநேரத்துக்குள்ளும், ஹைதராபாது சில நாட்களுக்குள்ளும் வழிக்கு வந்தன.
காஷ்மீர் பிரச்சினை விடுதலை இந்தியாவுக்கு நீண்டகாலம் ஒரு முள்ளாய் உறுத்திக்கொண்டிருந்தது. மன்னர் குடிமக்கள் வேற்றுமை, சில நாள் மன்னரைத் தயக்க நிலையில் வைத்திருந்தது. இறுதியில் மக்கள் தலைவரான ஷேக்கு அப்துல்லாவின் கோரிக்கைக்கு மன்னர் இணங்கித் தம் அரசு இந்தியாவுடன் சேர்வதாக அறிவித்தார். அதற்குள் பாகிஸ்தானிலிருந்து எல்லைப்புறப் படையெடுப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் அரசியல் இதற்கு மறைமுகத் தூண்டுதலாயிருந்ததுடன், விடுதலைக் காஷ்மீர் இயக்கம் ஒன்றைத் தொடங்கித் தானே படையெடுப்பில் கலந்து கொண்டது. அது விடுதலைக் காஷ்மீர் அரசும் நிறுவிற்று. நிலைமை முற்றுமுன் இந்தியா அவசர நடிவடிக்கை எடுத்துப் பெரும் பொருட் செலவுடன் வான்படையும் நிலப்படையும் அனுப்பி காஷ்மீருக்கு உதவியளித்தது.
காஷ்மீரின் போரினால் இந்தியாவின் படைத்துறைச் செலவு ஆண்டுதோறும் பெருகிற்று. தென்னிந்தியாவிலிருந்து சென்ற படை வீரர் ஜெர்மன் போரிலும் ஆப்பிரிக்க இத்தாலியப் போர்களிலும் பெற்ற அதே வீரப் புகழை இங்கும் நிலை நாட்டி, மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றனர். ஆயினும், படை நடவடிக்கை ஒன்றினாலேயே காஷ்மீர் பிரச்சினை தீரவில்லை. உலக நாடுகள் அமைப்பினிடம் இந்தியா மனுச் செய்து கொண்டது. காஷ்மீர் வகையில் உலக நாடுகள் அமைப்பு ஆமையின் வேகமும், இருதலைக் கொள்ளி எறும்பின்