8
அப்பாத்துரையம் - 12
வேற்றுமை இருக்கக் கூடும். ஆளப்படும் மக்களனைவருக்கும் ஆட்சியுரிமையில் சரிசமப் பங்குள்ள ஆட்சியையே நாம் குடியரசு என்று கூறுகிறோம். விடுதலை நாடுகளின் விடுதலை இயக்கம் இக்குடியரசையே குறியாகக் கொண்டு நடைபெறுகிறது.
விடுதலை நாட்டின் விடுதலைக் குறிக்கோள் குடியாட்சி நிறுவுவது; அதாவது, குடியரசு அமைப்பதே.
குடியரசு விழா
விடுதலை பெற்ற சில ஆண்டுகளுக்குள் நம் விடுதலை இயக்கத் தலைவர்கள் மாநில அரசைக் குடியரசு ஆக்கியுள்ளார்கள். அதன் பின்னர் அந்நாளையே நாம் குடியரசு விழாவாகக் கொண்டாடுகிறோம்.
நீண்டநாள் விடுதலைப் போராட்டத்தின் பயனாகவே நமக்கு விடுதலை கிட்டியுள்ளது என்பதை நாம் மறக்கக் கூடாது. அதே சமயம் போராட்டம் எதுவும் இல்லாமலே, தலைவர்களின் கனவார்வம் காரணமாக, அது ஒரு குடியரசும் ஆகிவிட்டது ஆயினும் நாடு குடியரசாக ஒரு சட்டம் போதியது. அதை நிறை குடியரசாக்க எந்தச் சட்டமும் போதாது. அதற்கு மக்களுள் ஒவ்வொருவரும் தத்தம் அரசியல் உரிமை கோரியாக வேண்டும். இந்தியத் தலைவர்கள் குடியரசு நிலை கடந்து இதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
இந்திய மக்கள்
"இந்திய மக்களாகிய நாங்கள்” என்ற சீரிய தொடருடன் தொடங்குகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், தலைவர்களின் உயர்ந்த குறிக்கோளையும் பண்பையும் இந்த முதல் வாசகமே காட்டுகிறது. அக்குறிக்கோள் நாட்டு விடுதலையுடன் அமையவில்லை; நாட்டு மக்கள் விடுதலையை, அதாவது நிறை குடியரசுரிமையைப் பற்றி அது கனவு காண முன்வந்துள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவின் உரிமைப் பத்திரம். அதன் முதல் வாசகம் மற்றோர் உரிமைப் பத்திரத்தை நமக்கு நினைவூட்டுவ தாயுள்ளது. அதுவே, உலக நாடுகள்