பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

269

எல்லையற்ற தயக்கமும் காட்டி நாட்கடத்திற்று. ஆயினும், பாகிஸ்தான் வசமிருக்கும் பகுதி நீங்கலாக, மற்றப் பகுதி இந்திய அரசியலுடன் 1952ல் இணைந்துள்ளது.

மன்னர் அரசுகளின் ஒருங்கிணைப்பு

மன்னர் அரசுகள், இந்தியா முழுவதும் மிகச் சிறிதும், மிகப் பெரிதுமாக வேறுபட்டும், இந்தியாவின் படத்தைப் பலவாறு இடை இடையே சிதைத்து உருக்குலைத்தும் வந்துள்ளன. இந்தியாவின் விடுதலைக்கு அவை பெரிதும் முட்டுக்கட்டை களாயிருந்தன. வருங்கால இந்தியாவின் அரசியல் வளர்ச்சிக்கும் அவை முட்டுக்கட்டையாயிருக்கும் நிலையிலேயே நீடித்திருக்கக் கூடும். ஆனால், இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என்று புகழப்பட்ட ஸர்தார் வல்லபபாய் பட்டேல் அவற்றை ஒரு நிலைப்படுத்த அரும்பாடுபட்டார்.

மன்னர் அரசுகளின் நிலைபற்றிச் சர்தார் கூறிய விளக்கம் இதுவே. "நம் நாடு, தன் பெரு மரபு பற்றியும் பேருரிமைப் பண்பாட்டுநிலையங்கள் பற்றியும் பெருமையே கொண்டிருக்கிறது. ஆனால், நம் மக்களில் சிலர் மன்னர் அரசுகளிலும் வேறு சிலர் பிரிட்டிஷ் இந்தியாவிலுமாகப் பிரிவுற்றிருப்பது இயற்கைக்கு மாறான தற்காலிக நிலையேயாகும். பண்பாடும் குருதியும் ஒன்றாயிருக்கும் போது, நம்மைப் பிரித்து வைக்கவல்ல ஆற்றல்கள் யாவை?” என்று அவர் வினா எழுப்பினார்.

மன்னரசுகளின் குடிமக்களிடம் கொண்ட இப்பாச உரிமையுடன் சர்தார் பட்டேல் மன்னர்களிடமும் நேச வலக்கரம் நீட்டிக் கூட்டுறவு நாடினார்; அதே சமயம் கூட்டுறவை மறுப்ப தால் இயல்பாக விளையக்கூடும் தீமைகளையும் எடுத்துக்காட்டி, அக்கூட்டுறவின் பயனை வற்புறுத்தினார். “விடுதலை இந்தியா விற்குள்ளாகவே சின்னஞ்சிறு அடிமை இந்தியத் தீவுகளுக்குள் கட்டுண்டிருக்க மன்னர் அரசுகளிலுள்ள குடிமக்கள் ஆர்வ முடையவர்களாயில்லை”, என்பதை மன்னர்களும் விரைவில் உணர்ந்துகொண்டார்கள். தங்கள் மக்களின் நாட்டுப் பற்றில் அவர்களும் பங்கு கொள்ள முன் வந்தார்கள். மன்னரசுகள் ஒவ்வொன்றாக மாநில அரசின் மன்னரசுத் துறையின் கீழ் ஒன்றுபட்டன. தங்கள் மரபுப் பெருமைகளையும் மக்கள்