பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

(271

மழை வளத்தின் பயனை நுகர விரும்புபவர்கள், அங்ஙனம் நுகர முற்படுமுன் இத்தடங்கல்களை அகற்றிப் பாதைகளைச் செப்பனிடுவது இன்றிமையாதது. விடுதலைப் போராட்டத் திடையே எழுந்த வகுப்புப்பூசல்களும், அவற்றை அடுத்து வந்த பிரிவினையும் மக்கட் பெயர்ச்சியும் விடுதலை மாமழையின் பின் நம் பாதையில் விழுந்து கிடந்த சாய்ந்த மரங்கள் ஆகும். அவை நம் முற்போக்குக்குக் குந்தகமான தடங்கல்கள்!

அத்தடங்கல்களை நாம் அகற்றிவிட்டோம். இது நமக்குப் பெருமை தருவது; ஊக்கமளிப்பது. இனி நாம் முனைந்து முன்னேறுவோம்; முன்னேற வேண்டும்!

நம் முன்னேற்றப் பாதைக்கு இன்னும் நம் விடுதலைக் குறிக்கோளை ஒளி காட்டவல்லது. மாநில விடுதலை என்ற குறிக்கோளை நமக்குக் காட்டி நம்மைப் போரோட்டத்தில் ஊக்கிய பேரவைத் தலைவர்கள், தங்கள் குறிக்கோளை இன்னும் உயர்த்தி நமக்குத் தொலைவழி காட்டியுள்ளார்கள். அக்குறிக்கோள், மக்கள் விடுதலை, மக்கள் வாழ்வின் வளம் ஆகியவற்றின்மீதும் நம் கருத்தைத் தூண்டுகின்றது.

விடுதலை பெறுவது அருமை. ஆனால் பெற்ற விடுதலையைப் பேணுவது அதனினும் அருமை. விடுதலையை ஒரு தடவை இழந்த நாம், அதை மீண்டும் இழந்துவிட நேராதபடி, விழிப்புடன் இருக்க வேண்டும். விடுதலை நம் குறிக்கோள். ஆனால், பழைய விடுதலை நமக்கு ஓர் எச்சரிக்கை! அதில் வலிமைக்கேடு, ஒற்றமைக்கேடு முதலிய உள்ளார்ந்த அடிமைப் பண்புகள் அடிமை மரபை வளர்த்தன.அவைகளே அயலாட்சியைக் கொண்டு வந்து மேலும் பல அடிமைப் பண்புகளை ஊக்கின. ஆனால், பழைய விடுதலையும் அடிமை மரபும் தரும் எச்சரிக்கை களால் நாம் நெஞ்சுடைய வேண்டுவதில்லை. ஏனெனில், விடுதலை நாளில் இழந்த பண்புகளை நாம் அயலாட்சியின் சூழலிலேயே முயன்று பேராடிப் பெற்றிருக்கிறோம். புதிய விடுதலையாட்சி அவ்வடிமைப் பண்புகளை வேரோடழித்து நம் விடுதலைக் கோட்டையை வலுப்படுத்த உதவ வேண்டும். இவ்வகையில் நமக்கு விடுதலை இயக்க வரலாறும், அதற்குத் தாயகமான மாநில வரலாறும் பல படிப்பினைகளும் எச்சரிக்கைகளும் தருவதுடன், நமக்கு வருங்கால வாழ்வில்

ல்