பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(272) ||-

அப்பாத்துரையம் - 12

ஊக்கமும் அளிக்க வல்லன. அவற்றில் நாம் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும்.

காலக் கண்ணாடி

காலம் என்ற

கண்ணாடியில்

பொதுநோக்கு,

நுண்ணோக்கு, தொலைநோக்கு என்ற மூன்று நோக்குகள் உண்டு. நிகழ்காலம், பொது நோக்கு. அது பொருள்களின் அளவையும் புறத்தோற்றத்தையும் மட்டுமே உணர்த்தும். இறந்தகால நோக்க நுண்ணோக்கு. நுண்ணோக்காடி' போல, அது பொருள்களின் ஆக்கத்தையும் வளர்ச்சிக் கூறுகளையும் காட்டும். எதிர்கால நோக்கு, தொலை நோக்கு. மற்ற இரண்டு நோக்கையும் வரலாற்று முறையில் ஆராய்ந்து காரண காரிய விளக்க முறையில் இரண்டையும் இணைப்பதாலேயே அது காட்சியாற்றல் தரும். வருங்கால நோக்கமும் இத்தகைய காட்சி ஆற்றலும் தரும் நூலே வரலாறு. விடுதலை இயக்க வரலாற்றையும் நாம் இந்நோக்குடன் நோக்கினால், அது நிகழ்கால அறிவை வளப்படுத்துவதுடன் நில்லாமல், வருங்கால வளர்ச்சிக்கு ஊக்கமும் வளமும் தரும்.

டுதலைப் போராட்டம் எங்கும் வேற்றுமை அகற்றும் ஆற்றல் வாய்ந்தது. முதிராத் தேசியங்கள் பல அதன் ஆற்றலால் கனிவுற்று முதிர்ந்த தேசிய இனங்கள் ஆகியுள்ளன. பிரிட்டனைப் போலப் பல தேசிய இனங்கள் கலந்த நாட்டிற்கூட, விடுதலைப் போராட்டம், அவ்வினங்களை ஒரே வார்ப்படத்திலிட்டுப் புடமிட்டு, ஒப்பற்ற ஒரே தேசிய இனமாக்கியுள்ளது. ஆனால், விடுதலைப் போர்க்காலத்தில் இந்திய மக்களிடையே இருந்து வந்த வகுப்பு வேறுபாடுகள், அப்போராட்டத்தின் பயனாக முற்றிலும் அகன்றுவிட்டன என்று எவரும் கூற முடியாது. ஏனெனில்,

அவை மாநில விடுதலையுடன் மாநிலப் பிரிவினையையும் கொண்டு வந்தன. பிரிவினையுடனும் அவை அமையவில்லை. எண்ணற்ற தேசமக்களின் உயிருக்கும் வாழ்வுக்கும் அவை இடர் விளைவித்தன. விடுதலைத் தலைவர்கள், போராட்டத்தில் காட்டிய தீரத்தை அவ்விடர்களை நீக்குவதிலும் காட்டினார்கள். இதனால், அவர்கள் மீது நமக்கு முன்பு இருந்த மதிப்பு.பன்மடங்காகப் பெருகியுள்ளது. ஆனால், அவர்கள் வேலை இத்துடன் நின்றுவிடவில்லை. தேசியத்தில் இருக்கக்கூடிய கறைகள் யாவற்றையும் அகற்றவல்ல விடுதலை