274
|- -
அப்பாத்துரையம் - 12
‘பயிர் எது? நற்பண்புகள் எவை?' என்று நாம் அறிந்து, அவற்றை ஓயாது பேண வேண்டும். 'களை எது? களைப்பண்புகள் எவை?' என்று அறிந்து, நாம் ஓயாது அக்களைகளைக் களையப் பாடுபடவேண்டும்.
ஆனால், களை எது? பயிர் எது?
இவற்றையறிய விடுதலை இயக்கமும் மாநில வரலாறும் நமக்கு உதவியாக வேண்டும்.
சாதி முறைமைக்கேடு
நம் சமூக வாழ்வின் மிகக் கொடிய களைப் பண்பு சாதி வேறுபாடு. அது மனித உலகில் தொடக்கத்தில் ஒருவேளை எல்லா நாடுகளிலும் பரந்த களைப் பண்பாய் இருந்திருக்கக் கூடும். ஆயினும், இன்று இந்திய மாநிலம் ஒன்றில் மட்டுமே நாம் அதனை முழு உருவில் காண்கிறோம். மனித இனத்தின் மற்றெல்லாப் பகுதிகளும் அதன் தடத்தையே நாம் எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவில் அதைக் கடந்து சென்று விட்டன; அல்லது பேரளவில் அதன் பண்பை மாற்றிக் கொண்டு விட்டன என்னலாம்.
பொருளியல் துறையிலும் சமூகமதிப்புத் துறையிலும் உயர்வு வேறுபாடும், உயர்வு தாழ்வு வேறுபாடும், உயர்வு தாழ்வு மனப்பான்மையும் உலகெங்கும் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவை பிறப்பு வேறுபாடாகி, ஒரு நாட்டு மக்களின் ஒரு பகுதியையும் அதே நாட்டு மக்களின் மற்றொரு பகுதியையும் பிரிப்பதுடன் நில்லாமல், நாட்டு மக்களனை வரையுமே பல்வேறினங்களாகப் பிரிக்கும் பண்பாய் இந்நில உலகில் வேறெங்கும் நிலைபெறவில்லை.
எந்த ஆங்கிலேயனும் மற்றெந்த ஆங்கிலேயனுடனும் இருந்து உண்பதையோ, பெண் கொள்ளல் கொடுக்கல் செய்வதையோ தடுக்கும் சமூக மரபு, சமய மரபு அல்லது அரசியல் கட்டுப்பாடு ஆங்கில நாட்டிலும் இல்லை; வேறெந்த நாட்டிலும் இல்லை. இந்தியா ஒன்றிலேயே இம்மரபுகள் இன்னும் நின்று நிலவுகின்றன; இன்னும் பெருகுகின்றன.
இது மட்டுமன்றி, ஆங்கிலேயன் ஜெர்மானியனையோ, ஜெர்மானியன் ஃபிரெஞ்சுக் காரனையோ தீண்டாதிருக்க,