இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
277
வளர்ச்சி மிகவும் அணிமைக்கால வளர்ச்சி. வகுப்புவாதம் இந்துப் பேரவை வளர்ச்சியினால் ஏற்படவில்லை; வகுப்புவாத வளர்ச்சியே இந்துப் பேரவையை வளர்த்துள்ளது என்பதை இது காட்டுகிறது. முஸ்லிம் சங்க வளர்ச்சியும் இது வகையில் முற்றிலும் வேறானதன்று. அத்துடன் இந்துப் பேரவையும் முஸ்லிம சங்கமும் வகுப்புவாத சங்கங்களாகவே வளர்ந்திருந்தால், அவற்றின் தலைமையில் முளைத்த வகுப்பு வெறியர்களே எப்போதும் இடம் பெற்றிருக்க வேண்டும். முஸ்லிம் வகுப்பு வெறியர்கள் பலர் உண்டு. ஆனால், அவர்களுடன் சேர்த்து முஸ்லிம் சங்கத் தலைவர் ஜின்னாவையும் ஒரு முதல் தர வெறியர் என்று எந்த தேசிய வாதியும் கூற முடியாது. அதுபோலவே, இந்துப் பேரவையைப் பேரளவில் வளர்த்த வீர சவர்க்காரை இந்து வெறியர்களில் முதல்வர் என்று எவரும் கூற முடியாது. அப்படியானால், முஸ்லிம் சங்கத்தையும் இந்துப் பேரவையையும் வகுப்புச் சங்கங்களாக்கி, அவற்றின் தலைவர்களை வகுப்புவாதத்தின் கையாட்களாக்கிய சத்திகள் அச்சங்கத்தினுள் பிறந்தவை அல்ல. அவை யாவை என்பதை நாம் ஆராய்ந்து காண்பது இன்றியமையாதது.
சாதி முறையை வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு சமூக முறையில் சமயக் குழுவும், ஒரு பெரிய சாதிக் குழுவே என்பதை இந்திய அரசியலில் கருத்துச் செலுத்துபவர் கவனிக்காமலிருக்க முடியாது. சாதியை ஏற்றுக்கொண்ட மதம், இந்து மதம் ஒன்றே, ஆனால், இந்துக்களைப் பெரும்பாலாராகக் காண்ட இந்தியாவில் இந்துக்கள் எத்தனை சாதியாகப் பிரிவுற்றிருந்தாலும், இந்து சமுதாயம் பல சாதிகளை உட்கொண்ட ஒரு பெருஞ்சாதியாகவே செயலாற்ற முடியும். பிறப்பினாலன்றி ஒருவன் இந்துவாக முடியாது என்ற நிலை இதைத் தெளிவுபடுத்தும். பிற மதத்துக்கு ஒருவன் மாறியவுடன் அவன் மதத்தைத் தற்காலிகமாகவே இழக்கிறான். கிறிஸ்து மதத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவிய ஒருவன், திரும்பவும் கிறிஸ்தவனாகும் உரிமை உலகெங்கும் உண்டு. ஆனால், இந்தியாவில் இந்துக்கள் மதமாறியவுடன் சாதியிலும் மாறிவிடு கின்றார்கள். மதமாற்றம் நிலையானதன்று, ஏனென்றால், கிறிஸ்தவனாக மாறிய இந்து மீண்டும் இந்துவாக முடியாதே தவிர, முஸ்லிமாகவோ புத்தனாகவோ மாற முடியும். ஆனால்,