278
அப்பாத்துரையம் - 12
இந்து மதம் ஒரு சாதியானதால் மட்டுமே, அவன் திரும்ப இந்துவாக முடியாது. மேலும், புதிய மதம் சாதியை ஏற்றுக் கொண்டால், அங்கும் சாதி பரவுகிறது. கத்தோலிக்கரிடையே பெரும்பான்மையாகவும், புரோட்டஸ்டண்டுக் கிறிஸ்தவர் களிடையேயும்
இஸ்லாமியர்களிடையேயும் சற்றுக் குறைவாகவும் இந்துக்களின் சாதி முறைமை பரவியுள்ளதைக்
காணலாம்.
நிலவ
தவிர, சாதியை ஏற்காத மதங்கள்கூட இந்தியாவில் பிறமத சமுதாயங்களிலிருந்து பிரிந்து வாழும் ஒரு பெருஞ்சாதியாகவே லவ முடியும். எனவேதான், இந்து மதம் இந்தியாவில் ந்துக்களைப் பல சாதிகளடங்கிய ஒரு பெருஞ்சாதியாகப் பிரித்ததுடன் நில்லாமல், இந்திய முஸ்லிம்கள், இந்தியக் கிறிஸ்தவர்கள், இந்தியப் பார்ஸிகள் போன்ற மதப்பெயர் கொண்ட பல சாதிகளையும் வளர்த்து வருகிறது.
மதம், அரசியல் ஆகியவற்றின் சாதி அடிப்படை ட
இந்தியாவில் சாதி இருக்கும்வரை மதவாழ்வு சாதிவாழ்வின் ஒரு திரையாக, ஒரு மறுபடிவமாக மட்டுமே இயங்க முடியும். சாதி அடிப்படையாய் மதவாழ்வு இருக்கும் வரை, தேச வாழ்வும் தேசியமும் அரசியல் வாழ்வும் உண்மையில் சாதிமத வாழ்வாகவே, அதாவது சாதியை அடிப்படையாகக் கொண்ட மதம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட சாதி ஆகியவற்றின் வாழ்வாகவே இருக்க முடியும். இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளில் பெரும்பாலனவற்றின் பெயர்களே இதற்குச் சான்று பகரும். முஸ்லிம் சங்கம், இந்துப் பேரவை, தாழ்த்தப் பட்டவர் பேரவை, பிராமணரல்லாதார் சங்கம் என்பவை மட்டுமன்றி, அவற்றுடன் போட்டியிடும் அல்லது அவற்றைவிட முனைத்த பிற முஸ்லிம் சங்கங்களும் இந்துச் சங்கங்களும் சீக்கிய சங்கங்களும் இருக்கின்றன."இந்தியாவில் அரசியல் கட்சி எதுவுமே இல்லை. சாதி சமயக் குழுக்களே உண்டு." என்று வெளி நாட்டறிஞர் ஒருவர் கூறிய கூற்று முழுதும் தவறானதென்று ஒதுக்கிவிடத் தக்கதன்று. சாதிசமயப் பெயரில்லாத கட்சிகளிலும் சாதி சமயப் பண்புகள் அதன் குழு நலங்களின் கருத்துத் திரைகளில் செயலாற்ற முடியும் என்பதைக் காண்டல் அரிதன்று.