பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

9

அமைப்பு வகுத்துள்ள உலக உரிமைப் பத்திரம். அது பல நாட்டு நல்லறிஞர்கள் சேர்ந்து உலகத்துக்காக அமைத்தது. அதுவும் “உலக மக்களாகிய நாங்கள்" என்றே குரலெழுப்பியுள்ளது.

‘உலக நாடுகளின் அரசுகள் ஒன்றுபட்டு விட்டன. இனி உலக மக்கள் ஒன்றுபட வேண்டும்.' இவ்விருப்பத்தையும் கனவார்வத்தையும், உலக மக்கள் என்ற தொடரால் உலக அறிஞர் சுட்டிக் காட்டினர். 'எல்லா நாட்டு அரசுகளும் மக்கள் அரசுகள், அதாவது, குடியரசுகள் ஆக வேண்டும்' என்ற குறிக்கோளையும் அது வலியுறுத்துகிறது. மாநிலம் விடுதலை பெற்றவுடனே நம் தலைவர்கள் இதே குறிக்கோளையும், கனவார்வத்தையும் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். இந்திய மக்கள் என்ற தொடர் இதைக் குறித்துக் காட்டுகிறது.

உலக மேடையிலிருந்து எழுந்த குரலுக்கு இந்தியா எதிர்க் குரலளித்துள்ளது. உலக அறிஞர் நீட்டிய அன்புக் கரத்துக்கு இந்திய அறிஞர் தம் அறிவுக்கரம் கொடுத்து அவர்களுடன் அளவளாவியுள்ளனர்.

இந்தியா விடுதலை பெற்றுவிட்டது; உரிமை பெற்று விட்டது; இந்திய மாநிலத்தின் பெயரால் அதைத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால், தலைவர்கள்- விடுதலை இயக்கத் தலைவர்கள்- மக்கள் தலைவர்கள், விடுதலையையும் அதன் பயனான ஆட்சியுரிமையையும் அவர்கள் மக்கள் உடைமை ஆக்கத் துணிந்துள்ளார்கள். "இந்நாட்டின் விடுதலை இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் உரியது. அதை அம் மக்களுக்கே உரிமைப்படுத்த விரும்புகிறோம். மக்கள் இனி அதைத் தமதாக்க வேண்டும். தமதாக்கத் தம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே எங்கள் விருப்பம்! இதுவே எங்கள் குறிக்கோள்!” இந்திய மக்கள்' என்ற தொடர் வாயிலாக இந்தியத் தலைவர்கள் கூறாமற் கூறும் குறிப்புரை வாசகம் இதுவே.

தொலை இலக்கு

நம் குறிக்கோள் இங்ஙனம் வானளாவ உயர்ந்த ஒன்று. அது முகில் திரைகளுக்குள்ளாக மறைந்து திகழும் இமயமலையின் உயர்ந்த முகடொத்தது. நம் தலைவர்கள் கனவு, தொலைக்காட்சி யாளர் கனவு. அது நீர்த்திவலைகளினூடாகப் பல்வண்ணக்