இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
279
சாதி ஒழியும்வரை சமய வேறுபாடு இந்தியாவின் அடிப்படை வேறுபாடு ஆகாது. தமிழகத்துக்குப் புறம்பான இந்தியா, இந்தப் பாடத்தை நன்குணரவில்லை; உணர்ந்திருந்தால், சாதியையும் புராண மூட நம்பிக்கைகளையும் எதிர்த்த பிரமசமாஜம், ஆரிய சமாஜம், சீக்கிய சமயம், கபீர்பாந்த் ஆகிய குழுக்களும், முன்னேற்றக் கருத்துடைய இடசாரிகள் என்று தம்மைக் குறித்துக்கொள்ளும் சமதருமப் பொது உடைமைக் கட்சியினரும், சாதி அடிப்படையான இந்து மதப் பண்பாட்டையும், சமூக அமைப்பையும், மொழி இலக்கியங்களையும், அரசியல் மரபையும் ஒப்புக்கொண்டு, இவற்றை ஏற்க மறுத்த முஸ்லிம் சங்கத்தை எதிர்ப்பதன் மூலம் இவற்றை வலியுறுத்தி வளர விட்டிருக்க வேண்டியதில்லை. அரசியல் துறையில் மாநிலப் பேரவை இந்துப் பேரவையிலிருந்து வேறுபட்டதாகத் தாடக்கத்தில் தோற்றினாலும், னாலும், பிரிவினையின்போது இரண்டின் குறிக்கோளும் போக்கும் கிட்டத்தட்ட ஒன்றுபட்டுவிட்டன என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.
தென்னாட்டில் அரசியலிலும், வாழ்விலும் இதே வகைக் குழப்பம் ஏற்பட்டிருந்தாலும், மறைமலையடிகள் போன்ற மொழித் தலைவர்களும், சமயத் தலைவர்களும், பெரியார் ஈவேரா போன்ற சமூக, அரசியல் தலைவர்களும் இக்குழப்பத்தில் சிக்காதிருந்து வந்துள்ளார்கள். சாதியையும் புராணத்தையும் அடிப்படையாகக் கொண்ட சமயப்பகுதி இந்தியாவின் பண்டைச் சமயங்களான சைவவைணவங்களுடன் செறிவுறக் கலந்து காணப்பட்டாலும், அவை சைவ வைண சமயங்களின் ஒரு கூறு அல்ல என்பதையும்; சாதி, புராண அடிப்படை அவற்றுக்குப் புறம்பான சுமார்த்த சமயமாதலால், அதை விலக்கியொழித்துச் சைவ வைணவ சமயங்கள் தூய்மை பெறக்கூடுமென்பதையும் மறைமலையடிகள் விளக்கினார். தென்னிந்தியாவில் சைவ வைணவ சமயப்பற்று, ஆஸ்திகப் புறச் சமயங்களாகிய இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியவற்றை எதிர்ப்பதைவிடப் போலிச் சமயப் பண்பாகிய சாதி புராண அடிப்படையை எதிர்ப்பதிலேயே மிகுதியாகக் கருத்துச் செலுத்துகின்றது. இந்து முஸ்லிம் வேறுபாடு வடநாட்டின் எதிரலையாகக்கூடத் தென்னாட்டில் ஏற்படாததன் காரணம் ஸ்லாம் சங்கமும் இந்துப் பேரவையும் பிற
இதுவே.