பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

(281

பேரவை எதிர் குரலளித்திருந்தால், இந்தியாவின் வாழ்வில் பெருநன்மை விளைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

தென்னாட்டில்

அரசியல் முன்னணியும்

சமூக

முன்னணியும் ஒன்றுபட்டிருக்கக் கூடுமானால், வடநாடு காந்தியடிகள் ஆரூயிரையும் ஜின்னாவின் சீரிய நல்லுயிரையும் நெறி காணா மயக்க வெறியினர் பிழைகளுக்கு இரையாக்கியிருக்க வேண்டியதில்லை. வகுப்புக் கலவரங்களும் மதவேற்றுமை அடிப்படையான பிரிவினைகளும் ஏற்பட்டிருக்க வேண்டிய தில்லை. அது மட்டுமன்றிப் பேரவை தன் பழைய குறிக்கோளாகிய முழு நிறை விடுதலைக் குறிக்கோள், மொழிவாரி மாகாணக் குறிக்கோள் ஆகியவற்றினின்று பிறழவோ, அவற்றை வலியுறுத்தத் தயங்கவோ, அவசியம் ஏற்பட்டிராது. இந்தியாவில் வகுப்பு ஒற்றுமையையும் சரிசம அடிப்படையான அக ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியுமானால், 'இவை பிரிவினை மனப்பான்மையை உண்டுபண்ணி விடுமோ!” என்ற இக்காலத் தேசியவாதிகளின் அச்சத்துக்கு இடம் ஏற்பட்டிருக்க மாட்டாது.

குடியேற்ற நாடு என்ற முறையில் இந்தியாவிற்குப் பிரிவினை உரிமை உண்டு. ஆனால், குடியேற்ற நாட்டுரிமை இன்று அதனைப் பிரிவினை விரும்பாத பொது அரசின் உறுப்பாக்கி யுள்ளது! பிரிவினை உரிமையுடைய மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டிருந்தால், இதே நிலைமைதான் ஏற்படும் என்பதில் தடை இல்லை. பிரிவினை பற்றிய அச்சத்தை விடப் பிரிவினைச் சூழலை உண்டு பண்ணும் பண்பு வேறு எதுவும் இல்லை. மேலும், மொழிவாரி மாகாணப் பிரிவினை முன்பே ஏற்பட்டிருந்தால், இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை கூடத் தடைப்பட்டிருக்கும். சாதி அடிப்படையான உணர்ச்சியைவிட மொழி, பண்பாடு, கொள்கையடிப்படையான உணர்ச்சி, ஒற்றுமைக்குச் சிறந்த

வழியாகும்.

கிரிப்ஸ் திட்டம் இவ்வகையில் இன்று ஏற்பட்டுள்ள பிரிவினையைவிடச் சீரிய திட்டத்தை நமக்குத் தந்திருந்தது என்பதைத் தேசிய நோக்கம் கொண்டவர் கவனிக்காதிருக்க முடியாது. எந்த மாகாணமும் தன் முடியுரிமையின் அடிப்படையில் தனித்து நிற்கவோ, நேரடியாக மாநிலக் கூட்டுறவில் சேரவோ அல்லது தனிக் குழுக் கூட்டுறவுகளில்