பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(282

அப்பாத்துரையம் - 12

சேர்ந்து அவற்றின் மூலமாகப் பெருங்கூட்டுறவில் சேரவோ, அது உரிமையளித்திருந்தது. அரசியலமைப்பு மன்றம் மன்றம் சீரிய உயர்குறிக்கோள்களைக் கொண்டிருந்ததாயினும், நடைமுறையில் பிரிவினை அச்சம், பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட மனக்கசப்பு ஆகியவற்றின் பயனாகவே மாகாணத் தன் முடிபுரிமைக் குறிக்கோளைக் கைவிட்டு, புறவொற்றுமையையும் மைய வலுவையும் நாடிற்று என்பதில் ஐயமில்லை.

வருங்கால இந்தியா, வேறுபாடுகளை மறுத்த வலிந்த ஒற்றுமைக் கோட்டையில் முனைவதைவிட, வேற்றுமைகளை மதித்து, அவற்றிடையே அடிப்படை ஒற்றுமைகளைக் கண்டு பேணும் சரிசம உரிமையுடன் கூடிய கூட்டுறவு அடிப்படை யிலேயே உயர் அக ஒற்றுமை காணப் பாடுபட வேண்டும்.

குழு நலன்கள்

பொருளியல் அடிப்படையில் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு முதலாளிகள் முயற்சி பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. ஆனால், முதலாளித்துவம் எப்போதும் குறுகிய மனப்பான்மையுடையது. எந்த முதலாளியும் பிற முதலாளிகளின் உரிமையையோ, பிறர் முதலாளிகள் ஆவதையோ அரசியல் உரிமையால் தடுக்க முனைவது இயல்பே. இன்று,தொழில், சில மாகாணங்களில் வளர்ந்தும் மற்றவற்றில் பிற்பட்டும் இருக்கிறது என்பதைப் பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட சிக்கல்களே வலியுறுத்திக் காட்டுகின்றன.

டம்

எல்லா மாகாணங்களும், எல்லா மாகாணங்களின் எல்லா வகுப்புகளும் தொழிலிலும் வாழ்விலும் முன்னேற வேண்டுமானால், முதலாளிகளை அரசியல் ஆளவேண்டும். முதலாளிகளே அரசியலை ஆளவோ, இயக்கவோ, இட ஏற்பட்டிருக்கக் கூடாது. மாகாணத்தின் தன் முடிபுரிமை, மொழிவாரி மாகாணங்களமைப்பு, பண்பாட்டடிப்படையாகச் சோவியத்துக் கூட்டுறவு நாடுகளிலுள்ளதுபோல கூட்டுறவின் கீழ்க் கூட்டுறவுகள் அமைதல் ஆகியவற்றை மாநில அரசியல் இன்று விரும்பவில்லை என்பது தெளிவு. இதில் முதலாளிகள் நலன்கள், அதுவும் இன்று விடுதலை இயக்கச் சூழல்களிடையே சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி வளர்த்துவிட்ட ஒரு சில வகுப்பு