இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
283
அல்லது ஒரு வகுப்பு முதலாளிகள் சிலர் நலன்களே பேணப்படுகின்றன.
விடுதலையை அணுகுந்தோறும், விடுதலை வந்த பின்னும், ச்சில முதலாளிகளே மக்கள் பேரவையை நேரடியாகவும் மறைமுகமாகவும் இயக்கி ஆட்கொண்டுவிட்டனர் என்பதைத் தேசியவாதிகள் நன்குணர்ந்திருந்தும், ஒப்புக்கொள்ள அஞ்சுகின்றார்கள். பிரிட்டிஷ் அயலாட்சியை எதிர்க்கத் தயங்காத தேசியம், அதில் தியாகங்களைச் செய்த தேசியம், இன்று பரந்த தேசிய முதலாளித்துவ நலனாகக்கூட இயங்க முடியாத ஒரு சில முதலாளிகளின் குழுநலனை எதிர்க்கும் ஆற்றலும் துணிவும் அற்று நிற்கின்றது என்பது வருத்தத்தக்க நிலையேயாகும்! ‘அடிமைத்தனமும் விடுதலையும், இருளும் ஒளியும் போல வளைய வளைய வருபவை தாமோ!' என்று எண்ண இது இடம் தருகிறது.
மொழித் துறை
ய
பொருளியல் துறையைவிட மொழித் துறை இந்தியாவின் தேசிய வாழ்வுக்கு முக்கியமானது. தேசிய வாழ்வின் மரபுப் பெருமைகள் யாவும் மொழியிலும் இலக்கியத்திலுமே அடங்கிக் கிடக்கின்றன. ஆனால், இவ்வகையில் இந்தியாவுக்கு, சிறப்பாக வட இந்தியாவுக்கு, ஒரு பெருங்குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. எவ்வாறாகவோ இந்தியாவில் தேசிய இலக்கியமாகத் தாய்மொழி இலக்கியங்கள் அணிமைக்காலம்வரை வளரவில்லை. சம்ஸ்கிருதம் என்ற வடமொழியிலேயே அவை பேணப்பட்டுள்ளன. தென்னிந்தியாவின் நிலை பொதுவாகவும், தமிழகத்தின் நிலை இன்னும் சிறப்பாகவும், இவ்வகையில் வேறுபட்டது. இங்கே தேசிய இலக்கியம் தேச மொழிகளாகிய தாய் மொழிகளிலேயே அமைந்துள்ளது.
இன்றைய இந்தியத் தேசிய இலக்கியம் ஆங்கில முதலிய மேனாட்டு மொழிகளின் தொடர்பால் திருத்தமடைந்து வருகிறது. ஆயினும், மேனாட்டுத் தொடர்பு நீங்கியவுடன் தேசியம் தாய்மொழிப் பாதையை விட்டுப் பழைய இருட் பாதையிலேயே நடக்கத் தொடங்கியிருக்கிறது. ஆங்கிலத்துக்குப் பதிலாகவோ அதற்கு அடுத்தபடியிலோ இந்தி இடம் பெறுவது