பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




284

அப்பாத்துரையம் - 12

ங்கே

இவ்விருட் பாதையை மறைக்கும் அரையிருட்போர்வையாகுமே தவிர, வேறன்று. ஏனெனில், இந்தி பெறும் இடம் தாய்மொழியின் இடமன்று; ஆங்கில மொழியின் இடமே.

பல மொழிஇனங்களை உடைய மாநிலம் பல மொழித் தொடர்பாலேயே சரிசம சகோதரத்துவமுடைய குடும்பமாக முடியும். தாய்மொழி அடிப்படையிலான அரசுகளின் தேசியமும், மொழியினம் பொருளியல் தோழமை அடிப்படையான தனிக் கூட்டுறவுத் தொடர்புகளுமே, இந்தியாவைச் சோவியத்துக் கூட்டுறவு போன்ற பெரிய அடிப்படை ஒற்றுமையும் முழு முதற்குறிக்கோளும் உடைய வலிமை வாய்ந்த கூட்டுறவாக்க

முடியும்.

காந்தியடிகள் காட்டிய வழி

பேரவைக்குக் காந்தியடிகள் காட்டிய வழி இவ்விடத்தில் நினைக்கத்தக்கது. விடுதலைப் போராட்டகாலப் பேரவையின் நோக்கம், அரசியல் விடுதலை. இந்த நோக்கங் கொண்டவர் களிடையேயும், அதை அடைவதற்கான வகைமுறைகளில் வேறுபாடு இருந்தது. எனவேதான் பல கட்சிகள் ஏற்பட்டன. பேரவை இக்கட்சிகளிடையே நடுநாயகக் கட்சியாகவும், மக்கள் ஆதரவுமிக்க கட்சியாகவும், பிற கட்சிகளை அடிக்கடி அன்பாதரவுடன் அணைத்த கட்சியாகவும் வளர்ந்து, வெற்றி கண்டுள்ளது. ஆனால், இன்றைய பேரவைக்கு அந்தப் பழைய குறிக்கோளும் பழைய முறைகளும் போதமாட்டா. அவை அதை ஒரு விடுதலைக் கட்சியாக்க முடியுமேயன்றி, விடுதலை ஆட்சிக்குரிய அரசியல் கட்சிகளுள் ஒன்றாக்க முடியாது.

இன்று பேரவை ஓர் அரசியல் கட்சியன்று; அதை திர்க்கும் கட்சிகளும் பழைய பேரவை எதிர்ப்புக் கட்சிக்கேயன்றிப் புதிய அரசியற்கட்சிகள் ஆகமாட்டா. இந்நிலை மாறிப் புதிய அரசியற் கட்சிகள் ஏற்படப் பேரவையே வழிகாட்ட வேண்டும். காந்தியடிகளே கூறியபடி அது பழைய விடுதலைக் கட்சியைக் கலைத்துப் புதிய ஆட்சிக் கட்சி அல்லது கட்சிகளை நிறுவ வேண்டும். பேரவைக்கு வெளியிலுள்ள கட்சிகளும் அப்போதுதான் அரசியல் கட்சிகளாக மாறும்.