இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
285
இன்றைய கட்சிகளுக்குக் கொள்கைகள் உண்டு. ஆனால், அவை அக்கொள்கையடிப்படையாக எழுந்த கட்சிகளல்ல. பழைய விடுதலைப் போராட்டக் காலக் கட்சித் தலைவர்களின் வல்லமைப் போட்டிகளாக மட்டுமே அவை செயலாற்றுகின்றன.
1952 தேர்தல் படிப்பினைகள்
1952ல் நடைபெற்ற தேர்தல் இந்தியாவில் வளரும் புதிய சக்திகளின் தன்மைகளையும், வருங்கால இந்தியாவின் தன்மைகளையும் அரசியல் எதிர் நோக்குடையவர்களுக்கு நன்கு விளக்கிக் காட்ட வல்லது. வடநாடெங்கும் பேரவை பெரு வெற்றிபெற்றது. ஆனால், பேரவைக்குள்ளே பேரவையின் வலசாரிகளும், வெளியே வலசாரிகளைவிட முனைப்பான வலசாரிகளான பேரவை எதிரிகளுமே வெற்றி கண்டார்கள். வடநாடு வலசாரி நாடுகளில் முனைத்த நாடாகி வருகிறது. என்பதை இது காட்டுகின்றது. அதே சமயம், தென்னாடு முழுவதும் பேரவையில் இடசாரிகளும் இடசாரிகளை எதிர்த்த முனைப்பான இடசாரிகளான பேரவை எதிரிகளுமே வெற்றி பெற்றுள்ளார்கள். இடசாரியின் இப்பெரு வெற்றி கண்டு அஞ்சிய வலசாரியினரின் அச்சம் காரணமாக, பேரவையில் வலசாரியே வலுத்து வருகிறது. பேரவை வலசாரிப் பக்கமே சாய்ந்து வருகிறது என்பதை இது தெள்ளத் தெளியக் காட்டுகின்றது.
இவ்விடத்தில் இடசாரிக் கட்சிகளில் வடநாட்டிலும் தென்னாட்டிலும் ஏற்பட்டுள்ள ஒரு வேறுபாட்டை நாம் கவனிக்க வேண்டும்: வடநாட்டில் இடசாரிகள் பொருளியல் துறை ஒன்றிலேயே இடசாரிகள்! சமயம், சமூகம், பண்பாடு, மொழி, இலக்கியம் ஆகிய துறைகளை இடசாரிகள் கவனிக்கவில்லை. அதில் வலசாரிகளுடன் ஒன்றுபட்டதுடன் நில்லாது, அடிக்கடி அவர்களையும் கடந்த வலசாரிகளாகப் பலர் உள்ளனர். தென்னாட்டில் பொதுவாகவும், தமிழகம், கேரளம் ஆகியவற்றில் சிறப்பாகவும் பொருளியல் சார்ந்த இடசாரிகள் மட்டுமன்றி, மற்றத் துறைகளிலும் கருத்துச் செலுத்திய சமய, சமூக, மொழி, இடசாரிகள் உள்ளன. தமிழகத்தில் சமூக இடசாரி இயக்கம், தன்மான இயக்கமாகவும்; மொழி இடசாரி, சமய இடசாரி இயக்கம், மறைமலையடிகளின் தனித்தமிழ்