பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




286

இயக்கமாகவும், சைவ மறுமலர்ச்சி விளங்குகின்றன.

அப்பாத்துரையம் - 12

யக்கமாகவும்

சமூகப் பண்பாட்டு இடசாரி இயக்கங்கள் இல்லாதபோது பொருளியல், அரசயிலில் துறையில் வலசாரியே வளரும் என்பதை வடநாட்டுத் தேர்தல் காட்டுகிறது. தென்னாடெங்கும் மொழி சமூக இடசாரிகளின் கருத்தொளி பரந்துள்ளதனாலேயே, பொருளியல் இடசாரி வெற்றி பெற முடிந்தது. ஆயினும், சமூக மொழி இடசாரிகளின் மூலதளமாகிய தமிழகத்தில், தென்னாட்டின் இடசாரிகள் வெற்றி மிகவும் மந்தமாகியுள்ளது. பொருளியல் இடசாரியினர், சமூக இடசாரியினர், மொழி இடசாரியினர் ஒற்றுமைக் குறைவே இதற்குக் காரணம், ஒருவருடன் ஒருவர் கருத்தும் நோக்கும் முரண்பட்டு வலசாரிக்கு அவர்கள் மறைமுக ஆதரவு தந்துள்ளார்கள்.

அரசியல் பொருளியல் வலசாரி இன்று உண்மையான தேசநலனை மறந்து அல்லது புறக்கணித்து, ஒரு சில மாகாணங்களின் அல்லது வகுப்புக்களின் குழு நலனையே மாநில ஆட்சி நலனாகக் கொண்டு, மற்ற மாகாணங்கள் குழுக்கள் ஆகியவற்றைக் குறுகிய நலங்கள் என எதிர்க்கின்றது. அதுபோலவே, மொழி சமூக வலசாரி என்பது, அவற்றின் ஆட்சியைக் கைக்கொண்டிருக்கும் ஒரு சிறு குழு நலனின் குறுகிய தன்னலமேயாகும். பேரவைத் தலைவர்களில் இக்குறுகிய தன்னலங்களை உணர்ந்து வழிகாட்டத்தக்கவர் பலர் உண்டு என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர்கள் கருத்துக்கள் கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் அடைபட்டு, வளரமுடியாதவையாகி விடுகின்றன. அவை கட்சிக் கருத்துக்களாகக் கருதப்படாமல், கட்சி கடந்து பரவ வேண்டுமானால், கொள்கையடிப்படையான கட்சி கடந்த புது ஒற்றுமை வளர வேண்டும்.

அடிப்படைப் பிரச்சினை: நேருவின் விளக்கம்

சாதி வேறுபாடு பற்றிப் பண்டித நேருவின் விளக்கம் வ்வகையில் மாநிலத் தேசிய வாழ்வுக்கு ஒரு வழிகாட்டியும் எச்சரிக்கையுமாகும்:

66

'இந்தியா தன் கருத்திலும் சமூகப் பழக்க வழக்கங்களிலும் உள்ள குறுகிய வேற்றுமை மனப்பான்மைகளை அகற்ற வேண்டும். அவை இந்தியாவுக்கு ஒரு சிறையாகி, அதன்