இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
(287
வளர்ச்சியைக் குறுக்கித் தடைப் படுத்துகின்றன. சாதியுயர்வு மனப்பான்மை இந்திய சமூகத்தில் எண்ணற்ற தடைச்சுவர்களை எழுப்பியுள்ளது. இது சமூக வாழ்வின் செயற்களத்தைக் குறுக்குகிறது. வைதிக இந்துக்களின் நாள் முறைச் சமய வாழ்வில் இது சமயத்தையும் போலியாக்கிவிட்டது. அதில் இன்று ஆன்மிகத் தன்மை எதற்கும் இடமில்லை. ஏனெனில், அதன் கவனமுழுவதும், 'என்ன உண்பது? என்ன உண்ணக்கூடாது? யாருடன் இருந்து உண்ணலாகும்? யாருடன் நெருங்காமல் விலக வேண்டும்?” என்பதிலேயே சென்று விடுகிறது. அடுப்பங்கரையில் தொடங்கிய இவ்வேற்றுமை, அங்காடி வாழ்விலும் அரசியல் வாழ்விலும் தொடர்ந்து பரவிவிடுகிறது.
“இந்துக்களின் ஒற்றுமைக் குறைவுக்குச் சாதி ஒரு சின்னம். சிலர் கூறுகின்றனர். 'சாதியின் அடிப்படைப் பண்புகள் இருக்கட்டும். அதன் பிற்காலத் தீங்குகளையும் விளைவுகளையும் மட்டும் அகற்றிவிடலாம்' என்று. சிலர் அதன் பிறப்படிப் படையை மாற்றிப் பண்புப்படையாக்கலாம் என்று பேசுகின்றனர். இவையனைத்தும் கவைக்குதவாத பேச்சுக்கள்; மக்கள் மனத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் மாறாட்ட முறைகள்! சென்ற காலத்திற் கூடச் சாதி செய்திருக்கும் அழிவு பெரிது! அது மக்களிடமிருந்து மக்களைப் பிரித்து வைத்ததுடன் நிற்கவில்லை. அது மக்கள் வாழ்விலிருந்து அறிவுடையவர் ஆராய்ச்சியறிவைப் பிரித்து வைத்தது; தொழிலாளர் நலங்களிலிருந்து அறிவுடையார் அறிவைப் பிரித்து வைத்திருக்கிறது.
66
'இவ்வகையில் நம் அடிப்படைக் குறிக்கோளை மாற வேண்டும். ஏனெனில் சாதி முறைமையும் சாதிமனப்பான்மையும் இக்கால நாகரிகப் பண்புக்கு நேர் எதிரானவை; குடியாட்சிப் பண்புக்கும் மாறானவை.”
விடுதலை பெறும்வரை போர்க்குரலும், கட்சிப் பிரிவுகளும், விடுதலை வேண்டுமா, அயலாட்சி வேண்டுமா?' என்ற அடிப்படையிலேயே இருந்திருக்க முடியும். இனி இந்திய னி வாழ்வின் வளர்ச்சிக்கும் இது போன்ற தெளிவான அடிப்படையுடைய புதிய போர்க்குரல்கள் வேண்டும்.