288
அப்பாத்துரையம் - 12
'சாதி வேண்டுமா, வேண்டாவா?' என்பது இந்தியாவின் இன்றைய அடிப்படைப் பிரச்சினையாக வேண்டும். 'வேண்டும்', என்று உள்ளத்தில் நினைப்பவர் பலர் இருக்கக்கூடும். ஆனால், அவர்கள் வேண்டும் என்று கூறிப் போராடுவதே நேர்மையானது. வேண்டும் என்று தன்னலம் காரணமாகவோ, அறியாமை காரணமாகவோ அல்லது கொள்கையடிப்படையாகவோ எண்ணிக்கொண்டு மெய்ப்புக்கு 'வேண்டா' என்று கூறி, அது தானாகப் போய்விடும் என்று மழுப்பும் போலிப் பொய்ம்மைக்கு மாநிலம் இடந்தரக்கூடாது 'இது இன்றைய இந்தியாவின் பிரச்சினை மட்டுமன்று; சென்ற இரண்டாயிர ஆண்டுகளாக இந்தியாவை அலைக்கழித்து வரும் பிரச்சினை', என்பதை நாட்டுப் பற்றாளரும் வரலாற்று மாணவரும் மறந்து விடக்கூடாது!
சாதி நாட்டம் கொண்டவர், நேரடி எதிர்ப்பைவிட மறைமுக எதிர்ப்பிலேயே நம்பிக்கை கொண்டவர்களாயிருந்து வந்திருக்கின்றனர். அவர்கள் பல நூற்றாண்டுகளாகச் சமயம், மொழி, ஒழுக்கமுறை ஆகியவற்றில் சாதி முறைக்கு ஆதரவான அடிப்படைக் குறிக்கோள்களைப் புகுத்தி வந்துள்ளார்கள். மொழித்துறையில் சம்ஸ்கிருதம் அல்லது வடமொழியின் நேரடி ஆதிக்கம் ஒரு புறமும், தாய்மொழியிலும் தாய்மொழி யிலக்கியத்திலும் வடமொழிச் சொற்கள், கருத்துக்கள் ஆகியவற்றைப் புகுத்துவதன் மூலம் ஏற்படும் மறைமுக ஆதிக்கம் மற்றொரு புறமும் இப்பிற்போக்கு மனப்பான்மையை ஒரு பிற்போக்குத் தேசியமாக வளர்க்க உதவுகின்றன.
சுமிருதிகளின் சாதிக் கொள்கை, 'ஒரு குலத்துக்கு ஒரு நீதி மனப்பான்மை' ஆகியவைகள், புராணக்கதை காவியங்கள் வாயிலாக முதலில் வடமொழியில் பரப்பப்பட்டு, வடமொழிப் பண்ணையிலிருந்து தாய்மொழி இலக்கியப் பண்ணையில் எடுத்து நடப்படுகின்றன. இது ஒரே கல்லில் மக்கள் மீது மொழியடிமைத்தனம், சாதியடிமைத்தனம், மத அடிமைத்தனம் ஆ ஆகிய மூன்றையும் புகுத்திவிடுகிறது. பலர் இவற்றையே இந்தியாவின் மூலப்பழமை என்று தவறாக எண்ணுவதால், இந்திய நாகரிகத்தின் பெருமை, இந்திய தேசியத்தின் பெருமை