10
அப்பாத்துரையம் - 12
கவர்ச்சியுடன் தோன்றும் வான வில்லைப் போன்றது. ஆயினும், குறிக்கோள் தொலைவிலிருந்தாலும், அதில் நம் கண்கள் பதிந்தால், கனவியல் சித்திரத்தை நோக்கி நம் அடிச் சுவடுகள் நம்மை இழுத்துச் சென்றுவிடுவது உறுதி. வழியில் மேடு பள்ளங்கள், காடு கரைகள் இருக்கலாம். ஆனால், களையகற்றும் இனிய நீரோடைகளும் இடையிடையே உண்டு. நம்மிடம் நம்பிக்கையும், விடாமுயற்சியும், தளரா மனவுறுதியும் இருந்தால், தொலைநோக்குடன் வழிகாட்டும் திறமுடைய தலைவர்களின் உதவி இருந்தால், நம் கனவு விரைவில் நனவாவது திண்ணம்.
முடியரசுகளும் குடியரசுகளும்
விடுதலை அரசுகளெல்லாம் குடியரசுகளல்ல. அவற்றுள் முடியரசுகளும் உண்டு. குடியரசுகளும் யாவுமே நிறை குடியரசு அல்லது மக்களரசு என்று கூற முடியாது. அவற்றுட் குறைந்த அரசுகளும் உண்டு. அவற்றை நாம் கூர்ந்துணர்ந்தால், நம் குறிக்கோள் எவ்வளவு தொலைநோக்குடையது என்பது விளங்கும்.
ளைகள்
முடியரசுகளிடையே மக்கள் நலனறிந்து ஆளும் முடியரசை முற்காலத்தவர், 'செங்கோலரசு' அல்லது 'செங்கோன்மை' என்றனர்; மக்கள் நலனுக்கு மாறாக ஆளும் அரசைக் 'கொடுங் கோலரசு' அல்லது 'கொடுங்கோன்மை' என்று வழங்கினர். ஆனால் இவ்விரண்டு வகை அரசுகளுமே மக்கள் விருப்ப மறிந்தும், மக்கள் ஆட்பேர்கள் மூலம் அவர்கள் கட்ட பெற்றும் ஆள வேண்டுமென்பதில்லை. இங்ஙனம் ஆளாத இருசார் அரசுகளையுமே மேனாட்டார் ஒருங்கே ‘கடுங்கோன்மை’ என்றனர். மக்கள் விருப்பமறிந்தும் அவர்கள் ஆட்பேர்கள் மூலம் அவர்கள் கட்டளைகளை ஏற்றும் ஆளும் அரசரின் ஆட்சியையே அவர்கள் நல்ல முடியரசு அல்லது பொறுப்புடைய முடியரசு என்று வழங்கினார்கள்.
குடியரசுகளிலும் பெயரளவுக்கே குடியரசாய், ஒரு தனி மனிதன் ஆதிக்கம் செலுத்தும் குடியரசும் உண்டு. இதுவே வல்லாண்மையரசு' எனப்படுகிறது. இது தவிர, ஒரு சிலர் அல்லது ஒரு வகுப்பாளரே உரிமை பெற்றவராய் முழு ஆதிக்கம் செலுத்துவதுண்டு. இத்தகைய அரசுகள் சில் குழுவாட்சி,