இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
11
குருமார் ஆட்சி, உயர்குடி ஆட்சி, பணித்துறை வல்லார் ஆட்சி, செல்வர் ஆட்சி எனப் பல தரப்படும் இத்தகைய படிகளெல்லாம் கடந்த நிறை குடியரச ‘மக்களாட்சி' அல்லது குடியாட்சி ஆகும்.
அரசியலமைப்புச் சட்டத்தில் 'இந்திய மக்கள் என்ற தொடர் நம்மைக் குடியரசின் எல்லை கடந்து இம்மக்களாட்சியைக் கனவு காண வைத்துள்ளது.
கூட்டரசு அமைப்பு
மாநில வருங்கால வாழ்வுக்குரிய மற்றொரு பகுதியையும் அரசியலமைப்புச் சட்டம் சுட்டிக் காட்டுகிறது. அந்தச் சட்டம் மாநில ஆட்சியைக் குடியரசாக்கியுள்ளது. ஆனால், மாநிலத்தை அது ஒரு ‘கூட்டுறவு' என்றே குறிக்கிறது. மாநில ஆட்சியும் இதற்கேற்ப ஒரு கூட்டுக் குடியரசு ஆகியுள்ளது. கூட்டுறவு என்ற புதுப்பெயருக்கேற்ப முன்பு 'மாகாணங்கள்' என்று வழங்கியிருந்த அதன் பெரும்பகுதிகள், இன்று ‘தனியரசுகள்' என்று வழங்கப் பெறுகின்றன. முன்பு மாகாணங்களுடன் சேராமல் தனிப்பிரிவுகளாய்ச் சிதறிக் கிடந்த ‘சிற்றரசுகள்’ இப்போது பெரிய திணைத் தொகுதிகளாக இணைக்கப் பட்டுள்ளன.
தனி அரசுகளுக்கும்,திணையரசுத் தொகுதிகளுக்கும் தனித் தனி மன்றங்களும் மேல் அவைகளும் நடைமுறையாட்சித் தலைவராக அரசு முனைவரும் அரசு முகவரும் உண்டு. கூட்டு நடுவரசுக்கும் இதுபோல ஒரு மாமன்றம் அல்லது மக்கள் பேரவையும், மேல் அவையும், அரசுத் தலைவராக ஒரு மாமுனைவரும் உண்டு.
குடியரசு கடந்த மக்களாட்சியை நாட்டுத் தலைவர்கள் கனவு கண்டுள்ளது போலவே, தனிக் குடியரசுகளுடன் திணையரசுகளும் இணைந்த இணைக்கூட்டரசையும் அவர்கள்
கனவு கண்டுள்ளார்கள்.
உலகின் ஒரு சிறிய பதிப்பு
நம் மாநிலம், ஒரு மொழி, ஓர் இனம், ஒரு சிறு பண்புடைய சிறு தனி நாடு அன்று; பல பெருமொழிக்குழுக்கள், பல பேரினங்கள், பண்பாடுகள் ஆகியவற்றின் கூட்டமைதி தழுவிய ஒரு பரந்த உலகப்பகுதி, மக்கள் பெருக்கத்திலும் தொகுதியிலும்