தென்பொதிகை தென்றலுடன்
தென்பொதிகைத் தென்றலுடன் தமிழைத் தந்த தேன்பொதிகை பூம்பொதிகை மலைபி றந்த தென்மொழியை-மென்மொழியை தமிழை அன்று தமிழ்மன்னர் மூவரிலே பாண்டி வேந்தன் தன்மகளாய்த் தான்வளர்த்தான் அதற்குப் பின்பு தார்வேந்தன் பொன்னிவள வேந்தன் காத்தான் தன்உயிராய் உயிர்மூச்சாய்க் கருதி வாழும் தமிழறிஞர் தமிழுக்கே தந்தை வாழ்க !
ஆண்டமொழி ஆளும்மொழிக் கெல்லாம் இந்த அன்னைமொழித் தமிழ்மொழியே மூல மாகும் ஆண்டுவரும் தமிழ்மொழியின் உயர்ந்த பண்பே அனைத்துலகப் பொதுப்பண்பின் இதய மாக வேண்டுமெனும் உயர்நோக்கம் கொண்டார் இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வழியில் ஒன்றாய் மூண்டெழுக தமிழ்இளைஞர் உலக மெங்கும் முப்பாலின் ஒளிவிளக்கை ஏந்திச் செல்க !
எழுத்தெல்லாம் பேச்செல்லாம் எண்ண மெல்லாம் இருந்தமிழின் மூச்சாக்கி வாழு கின்ற பழுத்தபழத் தமிழறிவுத் துரையே வாழும்
பழுதற்ற தமிழ்ப்பண்பின் உயிரே வாழ்க !
பழுதற்ற பலமொழியை அறிந்த எந்த
பைந்தமிழின் தலைமகனே நெடுநாள் வாழ்க !
செழுந்தமிழின் சிறப்பைஎலாம் உலக மக்கள்
சிந்தையிலே நிலைக்கும்செயல் செய்தே வாழ்க !
உதவு
புலவர், மணிமுடிச் சோழன்
தமிழ்மண் பதிப்பகம்
2, சிங்காரவேலர் தெரு. தியாகராயர் நகர்,
சென்னை 600 017.
தொலைபேசி : 044-24339030
செல்பேசி
- 9444410654