பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

||--.

அப்பாத்துரையம் - 12

பல்வகை வளப் பெருக்கத்திலும் அது ஒரு துணைக் கண்டம் என்று கூறத்தக்கது. எல்லா உலக இனங்களும், கிட்டத்தட்ட எல்லா உலக சமயங்களும் இதன் வாழ்வுடன் தொடர்புடையன; பல சமயங்கள் இதில் தோன்றி இதிலேயே வாழ்வன. சில, இதில் பிறந்து உலகெங்கும் பரந்து வளர்ந்தவை. இதற்கேற்ப, நம் மாநிலத்தின் வரலாறு உலகினுள் ஒரு தனி உலக வரலாறு அல்லது ஒரு குட்டி உலக வரலாறு என்று கூறத்தக்கது. இம் மாநிலமும் நாடுகளுள் ஒரு நாடாய் இராமல், உலகின் ஒரு சிறிய பதிப்பாகவே அமைந்துள்ளது. ஆகவேதான், வரலாற்று மரபு, பண்பாட்டு வளர்ச்சி, மொழி வசதி, அரசியல் ஆட்சி வசதி ஆகியவற்றை முன்னிட்டு, இந்தியா பல தனியரசுகளாகவும், திணையரசுகளாகவும் பிரிக்கப்பட்டு, இயல்கின்றன. இது ஒரு மாபெருந்தனியரசாக வகுக்கப்படாமல், கூட்டரசாக

வகுக்கப்பட்டதன் காரணம் இதுவே.

ஒற்றுமையும் வலிமையும்

ம்

நீண்ட நாள் அயலாட்சியின்கீழ் இருந்துவிட்ட இம் மாநிலத்துக்கு, ஒற்றுமையும் வலுவும் இன்றியமையாதவை. புதிய குடியரசு போராடிப் பெற்றுள்ள விடுதலையைக் காப்பாற்றிக் கொள்ள இப்பண்புகள் இன்றியமையாதவைகளாகின்றன. மேலும், உலக அரசியல் வாழ்வு ஒரு சூறாவளி போன்றது. அதனிடையே புதிய தேசீய வாழ்வாகிய மரக்கலம் இடையூறில் லாமல் செல்ல வேண்டுமானால், அம்மரக்கலம் உரமுடைய தாயிருக்க வேண்டும். அதன் பகுதிகள் ஒன்றுபட்டு உறுதியுடன் இணைக்கப்பட்டவையாய், சரிசமப் பளுவுடையவையாய் இருக்க வேண்டும். இவ்வுண்மைகளை நம் தலைவர்கள் நன்குணர்ந் துள்ளார்கள். எனவேதான் அவர்கள் இம்மாநில ஆட்சியை ஒரு கூட்டாட்சியாக்கியதுடன் நின்று விடவில்லை; இதனை வலிமை வாய்ந்த ஒருமுகப்படுத்தப்பட்ட கூட்டரசாக்க முனைந் துள்ளார்கள். இதை வலுவுடையதாகவும் தற்காப்புடைய தாகவும் வகுத்திருக்கிறார்கள். இதற்கேற்பத் தனியரசுகளும் திணை யரசுகளும் இதனைச் சார்ந்து இயங்குபவைகளாய், இதனால் உரிமை வரையறுக்கப் பெறுவனவாய் அமைக்கப்பெற்றுள்ளன.

பிரிட்டிஷ் ஆட்சி அயலாட்சியாய் இருந்தாலும் அதன்