இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
13
நடுவாட்சியின் வலிமையே இம்மாநிலத்தை ஒன்றுபடுத்தி ஆள உதவிற்று என்பதில் ஐயமில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் மாநிலத்தின் பெரும்பகுதியை ஆண்ட பேரரசுகள் பல. அவையும் ஆட்சி வலுவின் மூலமே பேரரசை ஒன்றுபடுத்தியிருந்தன. அவற்றின் வலுக்குறைந்ததே. அவற்றாலேற்பட்ட ஒற்றுமையும் தடங்கெட மறைந்தது.நடுவாட்சியை வலுப்படுத்தும் வகையில் இவ்வரலாற்றுப் படிப்பினைகளே தலைவர்களுக்கு வழிகாட்டியாயிருந்திருக்க வேண்டும். ஆனால், வரலாறு தரும் படிப்பினைகள் இவை மட்டுமல்ல. ஆட்சி வலிமையால் ஏற்படும் ஒற்றுமையைவிட, ஒற்றுமையால் ஏற்படும் ஆட்சி வலிமையே உறுதியானது. இதனை இம் மாநில வரலாறு மட்டுமன்றி, உலக வரலாறு முழுவதுமே காட்டும். ஏனெனில், ஆட்சி வலிமையால் ஏற்படும் ஒற்றுமை, புறவொற்றுமை. அது தற்காலிக ஒற்றுமை யாக மட்டுமேயிருக்க முடியும். ஆதிக்கத்தின் அடிப்படையில், உயர்வு தாழ்வு அடிப்படையில் ஏற்படும் இவ்வொற்றுமை, ஆதிக்கவலு அகன்றவுடன் மறைந்துவிடும். நேர்மாறாக, ஒற்றுமையால் ஏற்படும் ஆட்சி வலிமை நீடித்து நிலைக்கும். ஏனென்றால், இங்கே ஒற்றுமை அகவொற்றுமையாக, அன்பொற்றுமையாகவே இருக்க முடியும். ஆதிக்கம், உயர்வு தாழ்வு வேறுபாடு ஆகியவற்றிற்கு மாறாக இங்கே சரிசமத்துவமும், உறுப்பினர்களின் தங்குதடையற்ற தன் முடிபுரிமையும் நிலவும். இவற்றின் அடிப்படையில் ஆதிக்கமில்லாமலே கூட்டுழைப்புக்கு வழி ஏற்படும். இத்தகைய கூட்டுழைப்பு அல்லது அகவொற் றுமையே தேசீய ஒற்றுமை யாகும். பிரிட்டிஷ் ஆட்சியும் மற்றப் பேரரசாட்சிகளும் நாட்டிய ஒற்றுமை இத்தேசீய ஒற்றுமை யன்று; தேச ஒற்றுமை மட்டுமே. அவற்றால் மாநிலம் ஒன்றுபட்டது; ஆயினும், மாநில மக்கள் வாழ்வு போதுமான அளவு ஒன்றுபடவில்லை.
அகவொற்றுமை
ஆனால், பிரிட்டிஷ் ஆட்சி நாடிய வலுவுக்கும் விடுதலை இந்தியக் குடியரசு நாடும் வலுவுக்கும் ஓர் அடிப்படைவேற்றுமை உண்டு.
பிரிட்டிஷ் ஆட்சி, ஆதிக்கம் நாடிய ஆட்சி. அது நாட்டை