பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

அப்பாத்துரையம் - 12

ஒன்று படுத்த விரும்பிற்று. ஆனால், அது நாட்டு மக்களிடையே திட்டமிட்டு ஒற்றுமையை வளர்க்கவில்லை. அயலாட்சியாத லால், அது அதை விரும்பும் என்று நாம் எதிர்பார்த்திருக்கவும் முடியாது.ஏனென்றால், மக்கள் ஒற்றுமைக்கேடு அயலாட்சியின் பயன் மட்டுமன்று, அயலாட்சியை வரவழைக்கும் பண்பும், அதை நீட்டிக்கும் பண்பும் அதுவே ஆகும். விடுதலைக் குடியரசு இன்று நாடும் வலு, வெளிப்பார்வைக்கு இதே போன்ற புறவொற்றுமை யாய்த் தோன்றினாலும், பயனில் இதனின் வேறுபட்டது. அது தன் தற்காலிக வலுவையும் அதனால் ஏற்படும் ஒற்றுமையையும் நிலையான அகவொற்றுமையை வளர்க்கும் கருவிகளாக மட்டுமே பயன்படுத்தும் என்று நாம் நம்பலாம். மக்கள் தலைவர்களாகிய விடுதலை இந்திய அரசியலாரின் ஆதிக்கம், தாயின் ஆதிக்கம் போல, தேசீய வாழ்வைப் பேணி வளர்க்கும் திறமுடையது.

புற

மாநிலத் தலைவர்கள் அவாவுவது இந்த அன்பொற்றுமை தான். மாநிலவுரிமையை அவர்கள் மக்கள் உரிமையாக்கியது இதனாலேயே. அது மட்டுமன்றி, அவர்கள் தனி மனிதவுரிமை அல்லது அடிப்படை மனிதவுரிமைகளையும், சிறுபான்மைப் பாதுகாப்புரிமைகளையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உறுப்புக்களாக்கியுள்ளார்கள். மாநிலத்தைக் கடந்து மக்கள் வாழ்விலும், புற ஒற்றுமையைக் கடந்து அக ஒற்றுமையிலும் அவர்கள் கருத்துச் செலுத்தியுள்ளார்கள் என்பதை இது காட்டுகிறது.

அடிப்படை மனித உரிமைகள்

அயலாட்சியாகிய பிரிட்டிஷ் ஆட்சியில் உரிமைகள் யாவும் ஆளும் நாடாகிய பிரிட்டனிடமே இருந்தன. விடுதலையின் போது அவ்வுரிமைகள் மாநிலத்தின் பெயரால் ஆட்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், குடியாட்சியில் உரிமைகள் ஆட்சியாளரிடமிருந்து மக்களுக்கு இறங்கி வருவதில்லை; மக்களிடமிருந்துதான் ஆட்சியாளருக்கு மேல் நோக்கிச் செல்லும். இது காரணமாகத்தான் அரசியலமைப் பாளர் மக்களுரிமை அல்லது அடிப்படை மனித உரிமைபற்றிக் கனவு கண்டுள்ளனர்.