இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
19
சூழ்நிலைகள் ஆகியவற்றிடையேதான் அவை தழைக்கும். ஆகவே, மக்கள் ஆர்வங்கள் பெருகி, நல்லறிஞர்களின் கனவார்வங்கள் அவர்கள் உள்ளத்தில் முளையூன்ற வேண்டுமானால், மக்கள் வாழ்க்கைத் தரம் இன்றியமையாத் தேவையளவில் நின்றுவிடுதல் போதாது; வாழ்க்கையின்பமும், ஓய்வும், வாய்ப்பு நலங்களும் அவ்வெல்லை கடந்து, அவர்கள் விருப்பங்களைத் தூண்டி வளர்க்கு மளவிலும், சிறிது சிறிதாகவேனும் அவற்றை நிறைவேற்றுமளவிலும் அவர்களுக்குக் கிட்ட வேண்டும். ஏனெனில், அறிவும் அறிவார்வமும், கலையும் கலையார்வமும், மொழியும் மொழியார்வமும், சமூகப்பற்று இனப்பற்றுக்களும் வாழ்க்கை இன்பத்திலேயே வளர முடியும்.
மேலும், ஓய்வில்லாத உழைப்பு உழைப்பாகாது; இளைப்பே யாரும். உழைப்பில்லாத ஓய்வும் ஓய்வாகாது; மாய்வோயாகும். அத்துடன் இன்ப மில்லாத வாழ்வும் சுவைத்திற மாறுபாடில்லாத வாழ்வும் மனிதப் பண்புகளை வளர்க்கமாட்டா. உயர்தர விலங்குகளின் பண்புகளைக்கூட அவை உருவாக்கமாட்டா. இதனாலேயே அவ்வாய்ப்புகள் சென்றெட்டாத மக்களின் நிலை, பல நல்விலங்குகளின் நிலையைவிடப் பிற்பட்டுவிடுகிறது.விலங்கு நிலையுடன் மனித சமூகத்துக்குள்ள இப்பிணிப்பை அகற்றி நாடு வளர வேண்டுமானால், இவ்வாய்ப்புகள் யாவும் நாட்டின் கடைப்பட்ட வகுப்புகள் வரை சென்றெட்ட வழி வகுக்கப்பட வேண்டும். ஏழைகள், தாழ்த்தப்பட்ட, அமுக்கப்பட்ட, வாழும் உரிமை மறுக்கப்பட்ட வகுப்பினர் ஆகிய யாவரும் அதில் பங்கு பெறும் நிலை ஏற்பட வேண்டும். மாநிலத்தின் எல்லாப் பகுதிக்கும், எல்லா மொழியினருக்கும், எல்லா வகுப்பினருக்கும், பிரிவினருக்கும் அது சரிசம அளவில் பரவவும், சரிசம வாய்ப்புக்களுக்குரிய சூழ்நிலைகள், அவ்வெல்லா வகுப்பினருக்கும் கிடைக்கவும் நாம் வகை துறை காண வேண்டும். அப்போதுதான் நாகரிக உலகிலுள்ள ஏனைய நாடுகளின் வாழ்க்கைத் தரங்களுக்கு ஒப்பாக, அவற்றுடன் போட்டியிடு மளவுக்கு மாநில வாழ்வு பொங்கிப் பொதுள முடியும்.
புதிய பொறுப்பு
முடியாட்சி நிலவும் நாடுகளிலும், பொறுப்பற்ற ஆட்சி நிலவும் நாடுகளிலும் ஆட்சியைப் பொறுத்தது மக்கள் நிலை,