பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

(20) ||-

அப்பாத்துரையம் - 12

அரசனெவ்வழி, அவ்வழிக் குடிகள்.' என்னும் பழமொழி இந்நிலையைக் குறிக்கிறது. குடியாட்சி நிலை இதற்கு நேர்மாறானது. 'குடியுயரக் கோனுயரும்,' என்ற அருந்தமிழ்ப் பெருமாட்டியாரின் பொன்மொழி இதனைச் சுட்டிக்காட்டு கிறது. ஆட்சி நிலை இங்கே மக்கள் நிலையை, அவர்கள் பண்பை, அவர்கள் அறிவை, அவர்கள் ஆற்றலைப் பொறுத்தது. மக்கள் இங்கே அரசியலின் ஊழியராயிருக்கமாட்டார்கள். மாறாக, அரசினரே மக்கள் ஊழியராயிருப்பர். ஆயினும், முந்திய பொறுப்பற்ற ஆட்சியாளருக்கு இல்லாத ஒரு புதுப் பொறுப்பு. குடியரசின் ஆட்சியாளருக்கு உண்டு. மக்கள் ஏவுவதைச் செய்வதுடன் அவர்கள் முழுக்கடமை தீர்ந்துவிடாது. மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதுடனும் அவர்கள் பொறுப்பு நீங்கிவிடாது. ஏனெனில், மக்கள் நல்வாழ்வு, கல்வி, அறிவு நிலை, பண்பு ஆகியவற்றுக்கு இறுதியாகப் பொறுப்பு வகிப்பவர்கள் மக்களல்ல; ஆட்சியாளர்களே, இங்ஙனம் குடியாட்சியில் மக்கள் ஏவுவதையும் விரும்புவதையும் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையிலுள்ள அரசியலாரே, அவர்கள் விருப்ப நலங்களுக்கும் தவறுகளுக்கும் பொறுப்புடையவராகின்றனர்; இரண்டுபட்ட இப்பொறுப்பைச் சமாளிப்பதற்காகவே

ஆட்சியாளர் களிடையே கட்சியமைப்புகள் ஏற்பட்டுள்ளன; இவற்றின் மூலமும், பத்திரிகைகள், அரசியல் அறிஞர்கள், மக்கள் பற்றாளர்கள் ஆகியவர்கள் மூலமும் அவர்கள் மக்கள் விருப்பங்களை நல்வழியில் தூண்ட வேண்டும்; அவற்றிற் கேற்ற சூழ்நிலைகளையும் வகுக்க வேண்டும்.

முடியாட்சியில் அரசர் ஆள்கின்றனர்; அமைச்சர் அரசருக்கு அறிவுரை தந்து அரசரை இயக்குகின்றனர். புதிய குடியாட்சியில் மக்களே அரசர் நிலையிலுள்ளார்கள். ஆகவே ஆட்சியாளர் அவர்களுக்கு அறிவு கொளுத்தும் நல்லமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டியவராயுள்ளனர். இவ்வாட்சிப் பொறுப்பிலும் அறிவுரைப் பொறுப்பிலும் ஆளும் கட்சியினரை விட எதிர்க்கட்சியினரே பேரளவில் பங்கு கொள்கின்றனர். அவர்கள் எப்போதும் மக்கள் மனச்சான்றாக நிலவி ஆட்சியாளருக்கு எச்சரிக்கைகள் தருகின்றனர். இவ்வெதிர்க் கட்சிகள் ஒரு புறமும், மக்கள் தொண்டர், அறிஞர், பத்திரிகைகள்,