இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
21
இலக்கியவாணர், கலைவாணர் ஆகியவர்கள் மற்றொரு புறமும் இருந்து மக்கள் கருத்தை அரசியலுக்கும், அரசியலார் கருத்தை மக்களுக்கும் விளக்குகின்றனர். அரசியலுக்கும் மக்களுக்கும், அவர்கள் அவ்வப்போது ஆதரவுதந்தும், அறிவுரை தந்தும், வேண்டும்போது எச்சரித்தும், இடித்துத் திருத்தியும் அருந்தொண்டாற்றுகின்றனர். மக்களுக்கும் ஆட்சியாளருக்கும் ங்ஙனம் வளர்ச்சிக்குரிய தென்றலாய் விளங்கும் குடியாட்சி மரபுகளையும், அவற்றின் உரிமைகளையும், தூசு படாமல், தளர்வு பெறாமல் காக்கும் பொறுப்பும் ஆட்சியாளர்க்குரியது.
தமிழர் குடியாட்சி மரபு
66
ஆட்சியாளரின் இப்புதுப் பொறுப்பை நோக்க, நாம் மக்களை உடலாகவும், அரசியலை அவ்வுடலை இயக்கி வளர்க்கும் உயிராகவும் உருவகிக்கலாம். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்த தமிழ்ச்சங்க இலக்கியச் சான்றோர். "மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்”, என்ற வாய்மையுரை யால் இதனை நமக்கு அறிவுறுத்தியுள்ளனர். தவிர, "மன்னன்' என்ற தமிழ்ச்சொல் மரபும், பண்டைத் தமிழர் குடியாட்சி மரபை நமக்கு நினைவூட்டுகின்றது. தமிழில் உலகின் உயிரினத் தொகுதி மன்பதை என்றும், பொதுமக்கள் மன்மக்கள் என்றும்,அவர்கள் தரும் கருத்துரை மொழி மன் மொழி என்றும் குறிக்கப்படும். மன்மக்களின் பேராட்களான மன்பேராட்கள் வீற்றிருக்கும். மன்றம் என்ற அரசியலமைப்பில் மன்மொழி கேட்டு நடப்பவரே மன்னர் அல்ல ஆட்சித் தலைவர் ஆவர். இவ்வெல்லாச் சொற்களும் 'இடையறாது தொடர்ந்தும் பரந்தும் நிலவுதல்’ என்னும் பொருளுடைய மன்னு என்ற முதல் நிலைச்சொல்லின் திரிபுகளாகும்.
ஒரு சங்கிலியின் வலிமை அதன் கண்ணிகளின் மொத்த வலுவையோ, வலுமிக்க பகுதியையோ, சராசரி வலுவையோ கூடப் பொறுத்ததன்று; அதன் நைந்த அல்லது வலுக்குன்றிய பகுதியையே பொறுத்தது. ஏனெனில், அந்த நைந்த பகுதியில் தாங்க முடியாத பளு ஏற்பட்டவுடன், சங்கிலி அறுபடுவது உறுதி. சரிசம வலுவில் சிறிது குறைந்த அல்லது கூடிய பகுதியிலேயே முறுக்கேறும் நூல் அறுபடும் என்பதை நூல் நூற்பவர் கவனித்திருக்கலாம். ஒரு நாட்டிலும் இதுபோலவே நாட்டின்