பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

அப்பாத்துரையம் - 12

உயிர் நிலை வலிமை அதன் வலிவு மிக்க- அறிவு மிக்க- வளமிக்க பகுதியைப்பொறுத்ததன்று; இவற்றுள் பிற்பட்ட- கடைப்பட்ட

- பகுதியையே பொறுத்தது.

உடலின் எந்த உறுப்பு அல்லது பகுதியில் குறைபாடு ஏற்பட்டாலும், நோய் அதனைப் பற்றிக் கொள்வதுடன், அதனை மட்டுமன்றி,உடல் முழுவதையும் அலைக்கழிப்பது காண்கிறோம். இதனை உணர்ந்த நாட்டுப் பற்றாளர், நாட்டின் சரிசம வளர்ச்சி வாய்ப்பில் எந்தப் பகுதியும் நிலையாகப் பின் தங்கிவிட இடந்தர மாட்டார். எனவே, முற்படுபவர் முற்படுவதுடன் நின்றுவிடக் கூடாது. சராசரி நிலையை எட்ட முடியாமல் பிற்பட்டு நலிபவர்களை உயர்த்துவதிலேயே அவர்கள் முனைய வேண்டும். அவர்கள் மேம்பாட்டின் பயனும் புகழும் இதுவே. இச்செயல் சரிசம நிலையுடன் கூடிய மொத்த வளர்ச்சியை விரைவுபடுத்தும். இம்முறையிலேதான் நம் மாநிலத்தில் குடியாட்சி உரம் பெறும்; மக்கள் அவா ஆர்வங்கள் வளரும். அப்போதுதான் தனி மனிதர் வறுமை நாட்டு வாழ்வின் வளத்தை உள் நின்றழிக்கும் மறலியாக அமையாது.

விடுதலை இயக்கக் கவிஞர் பாரதியாரின் கனவு:

விடுதலைப் போராட்டக் காலத்தின் புத்தூழிக் கவிஞர் பாரதியாரின் கருத்துக்களையும் கனவையும் நாம் இவ்விடத்தில் கவனிக்க வேண்டும். மாநில மக்களின் எந்தச் சிறுபகுதி அல்லது சிறு குழுவுக்கு இடர் ஏற்பட்டாலும், அது புயற்காலச் சிறு முகிற்கீற்றைப் போல விரைவில் மாநிலவாழ்வின்மீது கறுத்துப் படர்ந்து, அதன் அமைதியைக் கெடுக்கும். ஒரு தனி மனிதன் வாழ்வின் குறைகூட இவ்வகையில் நம் கவனத்துக்குரிய தன்றென விடத்தக்கதன்று. எல்லா மக்களும் சரிசம வளர்ச்சி நாடும் சமுதாயம் நம்மிடையே ஏற்பட வேண்டும். அதில் எல்லாரும் இந்நாட்டு மக்களாகவும், இந்நாட்டு வாழ்வு எல்லாருடைய பொதுவுடைமையாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் எல்லாருடைய பொது வளத்துக்கும் பாடுபட வேண்டும். அதே சமயம் எல்லாரும் ஒவ்வொரு தனி மனிதன் வாழ்வும் வளமடையும் வகையில் பாடுபட வேண்டும். மனிதன் சமூகத்துக்காகவும், சமூகம் மனிதனுக்காகவும் நிலவுதல்