இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
23
வேண்டும். இதுவே பாரதியார் கனவு. அவர் பாடல் இவ்வகையில் நம்மை ஊக்கு விக்கின்றது.
பாரதசமு தாயம் வாழ்கவே- வாழ்க வாழ்க
பாரதசமு தாயம் வாழ்கவே ஜய ஜய ஜய
முப்பது கோடி ஜனங்களின் சங்க
முழுமைக் கும்பொது உடைமை!
(பாரத)
ஒப்பில் லாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை- வாழ்க
(பாரத)
இனிஒ ருவிதி செய்வோம்- அதை
எந்த நாளும் காப்போம்
தனிஒ ருவனுக் குணவி லையெனில்
ஜகத்தி னை அழித் திடுவோம்- வாழ்க
(பாரத)
எல்லோரும் ஓர்குலம், எல்லோரும் ஓர்இனம்,
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை, எல்லாரும் ஓர்விலை,
எல்லாரும் இந்நாட்டு மன்னர் நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்- ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்- வாழ்க:
(பாரத)
கவிஞர் கண்ட இக்கனவின் வீறு நம் நனவுலக
வாழ்க்கையின் பீடு ஆகத்தக்கது.
சமதர்மக் குடியரசு
'நாம் அனைவரும் ஒரு நாட்டு மக்கள்; நம் வேறுபாடுகள் ஒரு குடும்பத்தின் பல்வேறு உறவு வேறுபாடுகளே; என்ற எண்ணம் நம்மிடையே பரவுவதுதான் நம் அகவொற்றுமைக்கான மறைதிறவு ஆகும். வேறுபாட்டிடையே ஒற்றுமை காண்பதும், உயர்வு தாழ்விடையே சமநிலை உண்டுபண்ணுவதும் அன்பு ஒன்றே. அதன் அடிப்படையில் ஏற்படும் விட்டுக்கொடுப்பும், தன் மறுப்பும், ஒத்துழைப்பும், ஒரு நாட்டை மட்டுமன்றி, ஒரு மாநிலத்தை மட்டுமன்றி, ஓர் உலகத்தையே ஒன்றுபடுத்தத் தக்கவை. இத்தகைய அன்பு ஒற்றுமைக்கு மலையும் ஆறும்