பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

அப்பாத்துரையம் - 12

கடலுங்கூடத் தடையாயிருக்க வேண்டுவதில்லை. அவை இவற்றின் பல படி வளர்ச்சிகளுக்குரிய படி எல்லையாக மட்டுமே இருக்கத்தக்கவை. மொழி ஒரு பிளவாயிருக்க வேண்டுவதில்லை. மொழிபெயர்ப்புக்கலையும், ஒருவரை யொருவர் ஒத்துணரும் ஆர்வமும் அப்பிளவுகளிடையே பாலம் அமைக்கும். இனவேறுபாடு, பண்பு வேறுபாடு, கொள்கை வேறுபாடு ஆகியவைகூட நிலையாகப் பிரிக்க வேண்டுவதில்லை. ஒரே பூணாரத்தில் கோக்கப்பட்ட பல வடிவம் பல நிறமுடைய மணிகள்போல, அவை யாவும் ஒரே வாழ்க்கைக் குறிக்கோள், குறிக்கோள், ஒரே அரசுரிமை இலக்கு ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட வேண்டுபவையாகும்.

உயர்வு தாழ்வற்ற சரிசம சந்தர்ப்பமுடைய ஒருமுகப்பட்ட வாழ்வையே நம் தலைவர்கள் நாடியுள்ளார்கள்; ஆகவேதான் இந்தியக் குடியரசு ஒரு சமதர்மக் குடியரசாக அமைய வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.

அரசு என்பது மக்கள் பொருளியல் வாழ்வாகிய சுவர்கள் மீது எழுப்பப்படும் மாடகூடம் மட்டுமே. மக்கள் பொருளியல் வாழ்வில் சரிசம வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால், குடியரசு சமதர்ம நெறி பேணவேண்டுவது இன்றியமையாதது.அரசியல் மாடகூடங்களுக்கும் பொருளியல் மதில்களுக்கும் அடிப்படை ஆதாரமாய் அமைவது சமூகமே. அச்சமூக அடித்தளம் சமநிரப் புடையதாகவும், கூட்டு வலுவும் உறுதியும் உடையதாகவும் இருந்தாலல்லாமல், பொருளியல் வாழ்வும் அரசியலும் நின்று நிலவி வளம் பெறமாட்டா. அதுபோலவே, சமதர்மக் குடியரசுக்கு ஆதாரமான சமூகத்திலும் சாதி சமய இன வேறுபாடுகள் ஒத்துழைப்பையும் சரிசம நிலையையும் கெடுத்துவிடும். ஆகவே, சாதி சமய இனங்கள் சமூக உரிமைகளுக்குட்பட்டனவாக நிலவ வேண்டும். சமூக வாழ்வு அவற்றின் அடிப்படையாய் அமையவேண்டும். அவையே சமூக வாழ்வுக்கு அடிப் படையாய் விடக் கூடாது. எனவேதான் இந்தியத் தலைவர்கள், சாதி, சமய, பால், இன வேறுபாடற்ற ஒரு சமுதாயத்தையும், அரசியலையும் குறிக் கொண்டுள்ளார்கள். மாநிலக் குடியரசு கூட்டரசாக மட்டுமன்றி, சாதி சமய இன வேறுபாடற்ற சமதர்மக் குடியரசாகக் கருத்தமைக்கப்பட்டதன் நோக்கம் இதுவே.