காலங்கடந்த புகழ்
2. புகழ் மரபு
பரப்பிலும் பண்பிலும் பாரத தேசம் நாடு கடந்த நிலையுடையது என்பதைக் கண்டோம். காலப் பரப்பிலும் அது போலவே அது பல நாடுகளின் வரலாற்றெல்லையையும், வாழ்வெல்லையையும் கடந்தது. அதன் அகல் பரப்பில் பல நாடுகளின் முழுப்பரப்பும் ஒரு சிறு கூறாய் அடங்கிவிடும். அதுபோலவே, பல நாடுகளின் முழு வரலாறும் வாழ்வும் அதன் வரலாற்றில் ஒரு சிறு கூற்றினுள் அடங்கத்தக்கவை. எனவேதான் தேசங்களிடையே தேசங்கடந்த உலகின் ஒரு சிறிய பதிப்பாய் அது விளங்குவதுபோல, தேச வரலாறு கடந்த எல்லையற்ற காலத்தின் ஒரு சிறிய பதிப்பாய் அது நின்று நிலவுகிறது.
க்கால மேலை உலக நாடுகள் நாகரிக முழு ஒளி கண்டது. 15-ஆம் நூற்றாண்டிலேதான்.எனவே, அதற்குப் பிற்பட்ட சென்ற ஓரைந்து நூற்றாண்டுகளையே மேலை வரலாற்றாசிரியர் இக்காலம்' அல்லது 'புது நாகரிக காலம்' என்பர். இதற்கு முற்பட்ட ஆயிர ஆண்டுகளில் நாகரிகத்தின் அரை ஒளியே ஐரோப்பாவில் எட்டியிருந்தது. கி.பி.5ஆம் நூற்றாண்டுக்கும் 15- ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட இக்காலத்தை அவர்கள் டையிருட்காலம்' என்கிறார்கள்.
கி.பி. 5-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு ஐரோப்பாவின் மிகப் பெரும் பகுதியும் நாகரிகமற்ற முழு இருள் நிலையிலிருந்தது. ஆனால், அப்போதும் ஐரோப்பாவின் மூலத் தாயக நாகரிகங் களான கிரேக்க உரோம நாகரிகங்கள் தென் ஐரோப்பாவில் நிலவியிருந்தன. கி.மு. 700-க்கும் கி.பி. 500க்கும் இடைப்பட்ட அவற்றின் வாழ்வுக் காலத்தை மேலை வரலாற்றாசிரியர். ‘பண்டைக்காலம்' என்றனர். இதுவே, வரலாற்றின் தொடக்கக் காலம் என்றும் மேனாட்டார் நெடுங்காலம் எண்ணியிருந்தனர்.