28
அப்பாத்துரையம் - 12
ஆனால், இவற்றுக்கு முற்பட்டு, இவற்றின் நாகரிகங்களுக்கு மூலத் தாயகமான ஒரு பழம்பெருநாகரிகம் இருந்ததென்பதை நாம் இப்போது அறிகிறோம். இது ஸ்பெயின் முதல் சீனம்வரை பரந்து கிடந்தது. எகிப்து, சால்டியா, கிரீட்டு, சிந்துவெளி ஆகிய இடங்களில் அகழ்ந்து காணப்பட்ட புதை பொருளாராய்ச்சி களால், இதன் தொல்பழம்பண்புகளை நாம் உணர்கிறோம். கி.மு. 700க்கு முற்பட்ட இந்நாகரிகங்களின் காலத்தை வரலாற்றாசிரியர், 'வரலாற்றுக்கு முற்பட்ட காலம்' அல்லது 'தொல் பழங்காலம்' என்கின்றனர்,
இயற்கையன்னையின் மறு படிவம்
இந்தியக் குடியரசு இன்று மேலையுலக நாகரிக நாடுகளுடன் ஒரு தற்கால நாகரிக நாடாய், ஒரு புது வரலாற்று ஊழியில் கால் வைத்துள்ளது. ஆனால், ஐரோப்பா அரையிருளில் மறுகியபோது, அது நாகரிக ஒளி குன்றாது. உலகில் நாகரிக ஒளி பரப்பும் ஒரு கதிரவனாகவே நிலவிற்று. அத்துடன் வட ஐரோப்பிய உலகு, பழைய கற்காலத்துக்கும் புதிய கற்காலத் துக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்த காலத்தில், அது கிரேக்க உரோம வாழ்வுகளுடன் ஊடாடியிருந்தது. அப்போதும் அது பழம் பெருமையுடையதாய், வேளாண்மையும் தொழிலும், கல்வி கேள்வி இலக்கியங்களும், நாடு நகர் பேரரசும், கடல் கடந்த உலக வாணிக வளமும் உடையதாயிருந்தது.
ய
இது மட்டுமன்றி, உரோம கிரேக்க வாழ்வுகளைக் கண்டு கால அன்னை மகிழ்ந்திருந்தபோது, பாரதச் செல்வி அன்னை மகிழ்ச்சியில் தானும் கலந்து, அவர்களுடன் அலைகடலில் ஓடியாடி விளையாடியிருந்தாள்.எகிப்திய, பாபிலோனிய,பாரசீக நாகரிகங்களை இயற்கை அன்னை மடிமீது வைத்தும், தொட்டிலிட்டும் தாலாட்டியபோது, பாரதச் செல்வி உடனிருந்து பார்த்தும், இடையிடையே தாலாட்டியும் மகிழ்ந்தாள். ஆயினும், பிள்ளைப் பருவத்திலேயே தாய்மை உணர்ச்சி கொண்டு அத் தங்கையர் வாழ்வு தாழ்விலும், இன்ப துன்பத்திலும் அவள் ஈடுபட்டதால், அவள் குழந்தைப் பருவ வளர்ச்சியும், இளமைப் பருவ வளர்ச்சியும் தடைப்பட்டன என்னலாம்.