பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

29

தான் தாலாட்டிய குழந்தையாகிய தங்கையரும், தான் கூடி விளையாடிய சிறுமியராகிய தங்கையரும் காலத்தில் வளர்ந்து தளர்ந்து, காலவெள்ளத்தில் மிதந்தது கண்டு, அவள் கண் பனிகூர்ந்து கலங்கியும், கலங்கித் தேறியும், உரம் பெற்று வாழ்ந்து வந்துள்ளாள். இதனால், அவள் குழந்தைப் பருவம் பலர் இளமை கடந்தும், இளமைப் பருவம் பலர் முழு வாழ்வு கடந்தும் இன்னும் நீடிக்கின்றது. அவள் இளமை முதுபேரிளமையாகி யுள்ளது. அவள் தாய்மை, கன்னித் தாய்மை ஆகியுள்ளது. அவள் இயற்கையன்னையின் ஒரு மறு படிவம் ஆகியுள்ளாள்.

பாரத நாட்டின் இப்பண்பு, தமிழின் கன்னித் தாய்மை யுடன் ஒப்புடையது. இதனைத் தமிழ்ப் புலவர் பலபடப் பாராட்டியுள்ளனர். "பல உயிர்களையும் பரம்பொருள் படைக்கிறது; படைத்துக் காக்கிறது; அழிக்கிறது. ஆனால், உயிர்கள் பிறந்திறந்தும், பரம்பொருள் என்றும் ஒரு நிலையில் நின்று நிலவுகிறது. தமிழ் மொழியும் இது போன்றது. அது பல மொழிகளையும் ஈன்றெடுத்த தாயாகியுள்ளது. ஆயினும், அது கன்னி இளமை மாறவில்லை. பிற பல மொழிகள் அழிவதை அது கண்டுள்ளது. ஆனால், அது அழியா மொழியாய் உள்ளது.” மனோன்மணீயம் இயற்றிய பேராசிரியர் சுந்தரனார் இப்பொருள்படத் தமிழன்னையை வணங்கிப் பாராட்டி யுள்ளார். பாரத தேசத்தையும் இதே வாசகங்களால் பாராட்டுதல் பொருந்தும்.

உலகளாவிய பண்பாட்டியக்கங்கள்

வரலாற்றாசிரியர் பலர் ஒரு நாட்டின் வரலாற்றை அரசியல் நிகழ்ச்சிகளின் ஒரு கோவையாக எண்ணுவதுண்டு. நாட்டின் காலக்கோப்பு வரலாற்றின் அடிப்படைச் சட்டமாதலால், இந்நிகழ்ச்சிக் கோவை இன்றியமையாததே என்பதில் தடை யில்லை. ஆனால், நாட்டு வரலாற்றின் உயிர் நிலை இந்நிகழ்ச்சிக் கோவையிலில்லை. நாட்டின் அரசியல் நிலையங்கள், பொருளியல் வாழ்வு. பண்பாட்டு இயக்கங்கள் ஆகியவற்றிலும், அவற்றை நிலையாக மாற்றியமைக்கும் புரட்சி இயக்கங்களிலுமே அவ்வுயிர்நிலைப் பண்பைக் காணலாம். மேனாடுகளின் வரலாற்றில் அடிப்படைச் சட்டமாகிய காலக்கோப்பும் நிகழ்ச்சிக் கோவையும் பேரளவில் கட்டமைக்கப்பட்டுள்ளன. கீழ்