30
அப்பாத்துரையம் - 12
நாடுகளிலும் இந்தியாவிலும் இவை அணிமையிலேதான் சிறிது சிறுதாகக் கட்டமைந்து வருகின்றன. ஆயினும், பண்பாடு, மொழி, கலை, சமயம், இலக்கியம், அறிவுத்துறை மரபுகள் ஆகியவற்றின் வகையில் இந்திய வரலாறு வளமிக்கது. வரலாற்றாசிரியர் இன்னும் இவை பற்றிப் போதிய கவனம் செலுத்தவில்லை என்று கூறுவது தவறாகாது.வடநாட்டில் தாய்மொழியின் நிலைகளைப் பற்றியோ, வடமொழி இலக்கிய வளர்ச்சி பற்றியோ, வரலாற்றாசிரியர் பெரிதும் கவலைப்படுவதில்லை. அந்த அளவு கூடத் தென்னாட்டின் மொழிவளம் பற்றியோ, பண்டைத் தமிழ்ச் சங்க இலக்கியம் போன்ற வளமான கலைத் துறைகள் பற்றியோ, கருத்துச் செலுத்துவதில்லை.
பண்பாடு,கலை ஆகியவற்றின் வளர்ச்சிபற்றி வரலாற்றறிஞர் கருதும்போதுதான், அவை சார்ந்த இயக்கங்கள் அரசியல் நிகழ்ச்சிகளைவிட விரிந்த செயல் வீச்சுடையவை என்பதைக் காண முடியும். ஏனெனில், இவை காலம் கடந்து நாட்டு வாழ்வில் நிலையாகச் செயலாற்றத் தக்கவை. இவற்றுட்பல, நாட்டைக் கடந்து உலகிலேயே செயலாற்றவும் கூடும். அமெரிக்க விடுதலைப் போராட்டம், அமெரிக்க நாட்டு வாழ்வு முழுவதையுமே நிலையாக வளர்க்கும் ஓர் இயக்கமாயமைந்தது. அது ஒரு வரலாற்று நிகழ்ச்சி மட்டுமன்று; அதுவே ஒரு வரலாறும் ஆகும். மற்றும் பிரெஞ்சுப் புரட்சி இயக்கம் நிலையாகப் பிரெஞ்சு நாட்டை இயக்கியதுடன், உலகையே இயக்கிய உலகப் புரட்சி இயக்கங்களுள்ளும் ஒன்றாயிற்று.
இந்தியாவின் வரலாற்றைப் பண்பாட்டுக் கண்ணுடன் பார்ப்பவர்களுக்கு அது முற்றிலும் பண்பாட்டியக்கங்களின் வரலாறாகவும், புரட்சி இயக்கங்களின் வரலாறாகவுமே இருப்பது தெரியவரும். அத்துடன் அப்பண்பாட்டு இயக்கங்களும் புரட்சி இயக்கங்களும் மற்ற நாடுகளின் இயக்கங்களுக்கும் புரட்சி களுக்கும் மூலகாரணமாயிருந்து, உலகை இயக்கி வந்துள்ளன என்பதையும் காணலாம்.
வரலாற்றாசிரியர் குறை நோக்கு
இந்திய மாநிலத்தின் புரட்சிகரமான பண்பாட்டுப் பேரலைகள், பெரும்பாலும் வரலாற்றாசிரியர்கள் கண்களுக்குத்