இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
31
தப்பியுள்ளன. இதற்கு மூன்று காரணங்கள் கூறலாம்: ஒன்று, அவர்கள் அரசியல் நோக்குடன் அரசியல் நிகழ்ச்சிகளையே நாடினார்கள்: மக்கள் வாழ்வையோ, அதன் பண்பையோ நாடவில்லை. அத்துடன் மக்கள் பண்பை நாடுபவர், கண் கண்ட இக்காலச் சூழல்களினுதவியால் இறந்த காலத்தை ஆராய்வர்: அவ்விறந்த காலத்தினுதவியால், இக்காலத்தின் மறை பண்பு களையும் மறை மெய்ம்மைகளையும் உணர்வர். இவ்விரண்டின் உதவியாலேயே அவர்கள் வருங்காலத்துக்குரிய வரலாற்றுப் படிப்பினைகளையும் திட்டங்களையும் வகுப்பார்கள்.
இரண்டாவதாக, ஒரு பொருளைக் காணும் வகையில் அதன் மிக்க நுண்ணளவு தடையாயிருப்பதுபோல, மிக்க பேரளவும் தடையாயிருக்கக் கூடும். பண்டைக்காலக் கப்பலோட்டிகளைப் பற்றிக் கூறப்படும் ஒரு மரபுரை இதைச் சுட்டிக் காட்டுகிறது. நடுக்கடலிடத்தே அவர்கள் ஒரு திடலைக் கண்டு இறங்கிச் சமைத்துண்ணத் தொடங்கினார்கள். அடுப்பில் தீ எரியும் சமயத்தில் திடல் குதித்து எழுந்து கடலுள் மூழ்கத் தொடங்கிற்று! அப்போதுதான் திடல், திடலன்று; ஒரு பெரிய கடல் வாழும் உயிரினத்தின் முதுகு; என்பதைக் கப்பலோட்டிகள் கண்டார்களாம்! இதுபோலவே, இந்தியாவின் பண்பாட்டியக் கங்கள் இயக்க அளவு கடந்தவையாய் இருந்ததால், மேற்போக்காக வரலாற்றை வகுத்தவர் கண்களுக்கு அவற்றின் முழு உருவம் தென்படவில்லை. அவை ஆண்டு மாதக் கணக்கில் எழுந்து வளர்ந்து அமிழும் சிறு வரலாற்றலைகளாயிராமல், நூற்றாண்டு ஆயிர ஆண்டுக் கணக்கில் வளர்ந்து தளர்ந்த பேரலை எழுச்சிகளாயிருந்தன. வரலாற்றாசிரியர் கண்களுக்கு அவை அலையாகப்படவில்லை; கடலின் நீர்ப்பரப்பாகவே தோன்றின. இது முழுதும் வியப்புக்குரிய செய்தி அன்று. ஏனெனில், இந்தியாவில் வரலாற்றுக் கால வளர்ச்சி முழுவதும் பல சிற்றலைகளடங்கிய இரண்டு பேரியக்க அலைகளாகவே
அமைந்துள்ளது.
இரு பேரியக்க அலைகள்
அவற்றுள் முதலாவது அலை, கி.மு. 800க்கு முன்பே தொடங்கி, கி.பி. 500 வரை நிலவிற்று. அது மக்கள் சமய, சமூக,