32
ய
அப்பாத்துரையம் - 12
அறிவுப்பண்புகள் பற்றிய முழு நிறை ஆராய்ச்சியாக உருவெடுத்தது. இந்தியாவின் அடிப்படைப் பண்புகள், கருத்துகள் ஆகியவற்றை இவ்வியக்கமே வரையறுத்தது என்னலாம்.
இரண்டாவது அலை, கி.பி. 500லிருந்து தொடங்கி, கி.பி. 1800லேயே முடிவுற்றது. இதுவே பத்தி இயக்க அலை. இது தென்னிந்தியாவில் எழுந்து, வடவிந்தியாவில் பரந்து, இந்திய மக்கள் சமய வாழ்விலும்,மொழி இலக்கிய வாழ்விலும் மிக்க பெரும்புரட்சிகளை உண்டுபண்ணிற்று.
ந்தியாவின் சென்றகாலப் புகழும் வரலாறும்
இவ்விரண்டு அலைகளிலேயே அடங்கியுள்ளன.
வ்விரண்டு அலைகளையும் அடுத்து எழுந்த மூன்றாவது அலை, இப்போதுதான் தொடங்கியுள்ளது. அதுவே, விடுதலை இயக்கப் பேரலை. அது கி.பி. 1800க்கு முன்பே தொடங்கி, இப்போது தன் முதல் வீச்சிலேயே மாநிலத்துக்கு விடுதலை தந்துள்ளது. அதன் முழு ஆற்றலும் பயனும் வருங்கால பாரதத்தின் வரலாற்று வடிவிலும் புகழ் வடிவிலும் உருவாக வேண்டுபவை. முந்திய இரண்டு அலைகளின் தொடர்ச்சியான இவ் வலையை அவற்றின் அறிவு கொண்டே நாம் நன்கறிய வேண்டும். மேற்கூறிய இயக்க அலைகளை அறியும் வகையில் அவ்வலைகளுக்கு அடிப்படை மூலாதாரமான தேசீய வாழ்வாகிய கடற்பரப்பில் வரலாற்றாசிரியர் கருத்துச் செல்லவில்லை.
வரலாற்றின் வாயிலில் அவர்கள் கண்ட சில நிகழ்ச்சிகளி லிருந்து அவர்கள் தொடங்கி, அதன் பின்னும் நிகழ்ச்சிகளையே வரலாறாக அவர்கள் தொடுக்க முடிந்தது. அந்நிகழ்ச்சிகளி லிருந்து அவர்கள் இன்றைய வாழ்க்கைச் சித்திரத்தை வருவிக்கவும் முடியவில்லை. ஏனெனில், அச்சித்திரத்தின் மூல முதற்படிவம் நமக்கு அணிமையிலேயே கிட்டியுள்ளது. இன்றைய இந்திய நாகரிகத்தின் கருமூலம், இன்று நேற்றுப் புதிதாக வந்ததன்று. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அதுமிக்க பழமை அடைந்துவிட்ட ஒன்றாயிருந்தது என்பதை நாம் இப்போது அறிகிறோம். இதனை மொகஞ்சதரோவிலும், ஹரப்பாவிலும் அகழ்ந்து காணப்பட்ட சிந்துவெளி நாகரிகம் நமக்கு உணர்த்தியுள்ளது.