பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

இந்தியாவின்

உண்மை

வரலாறு

33

இங்ஙனம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே தொடங்குகிறது.

தாயகத்தின் முதற் சித்திரம்

'இந்தியாவின் மறு காட்சி' என்ற நூலில் விடுதலை இந்தியாவின் தொடக்க முதல்வர் பண்டித ஜவஹர்லால் நேரு இந்நாகரிகம் பற்றிக் கூறுவதாவது:

66

'உள்ளத்தில் இறும்பூது ஊட்டும் சிந்துவெளி நாகரிகச் சின்னங் களின் மூலம் நாம் இந்தியாவின் தொல்பழங்கால வாழ்வு பற்றிய முதற் சித்திரத்தைக் காண்கின்றோம். இது பண்டையுலகு பற்றிய பழங் கருத்துக்களனைத்திலும் பெரும்புரட்சி உண்டு பண்ணியிருக்கிறது. நாம் அறிந்த அளவில், கி.மு. 300க்கு முன்பே இந்தியா மிக உயர்ந்த நாகரிகப்படியை அடைந்திருந்தது. அத்துடன் அந்நிலையை அடையுமுன் அது பல்லாயிர ஆண்டு வளர்ச்சியடைந் திருக்க வேண்டும் என்பதிலும் ஐயமில்லை. வியத்தகு முறையில் அது ஒரு சமயச்சார்பற்ற நாகரிகமாகவும் காட்சியளிக்கிறது. சமயத்தின் கூறு அதில் காணப்பட்டபோதிலும், அது மேலோங்கி யிருக்கவில்லை. அத்துடன் பிற்கால இந்திய நாகரிகங்களின் முன்னோடி மரபுப் பண்புகள் யாவும் அதில் உள்ளன.

""

து

மறைந்த உலக நாகரிகங்களில் ஒன்றான இந்தச் சிந்துவெளி நாகரிகம். இந்தியாவில் வளர்ந்த நாகரிகம் மட்டுமன்று. இது இந்திய நாகரிகமேயாகும். இந்திய மக்களுக்குச் சிறப்பான கருத்துக்கள், பழக்கவழக்க மரபுகள், எழுத்து முறை, கலைகள், தொழில்கள் ஆகிய யாவும் இம்மறைந்த நாகரிகத்தில் காணப்படுகின்றன. அவற்றுடன் நகர வாழ்வும், வாழ்க்கைத் தரமும் அன்று மிக உயர்ந்தவையாயிருந்தன. அந்நகர்களின் வடிகால் வசதிகளும், குளிப்பறைகளும், பாவிய தெருக்களும் இன்றைய நாகரிக நகரங்கள் பலவற்றைத் தோற்கடிப்பவை. வெளி உலகத் தொடர்பு வகையிலும் இத்தொல்பழங்காலத்திலேயே பாரசீகம், மெசபொட் டோமியா, எகிப்து ஆகிய நாடுகளுடன் இந்தியா வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது என்பதை அறிகிறோம்.