பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

35

இந்திய விடுதலை இயக்கத்தின் மாபெருந்தலைவரும், சிறந்த வரலாற்று ஆராய்ச்சியாளருமான பாலகங்காதரதிலகர். ஆரியர் வடதுருவப் பகுதியிலிருந்து வந்தவர் எனக் கருதுகிறார். எப்படியாயினும், அவர்கள் நடு ஆசியாப் பகுதி வரும் வரை நாடோடிகளாகவே இயங்கினார்கள் என்றும், நடு ஆசியாப் பகுதியில் ஆரியம் என்று பிற்காலத்தில் வழங்கிய நாட்டில் வந்தபின்னரே, ஓரளவு ஏரும் உழவும் பயின்று ஆரியர் என்ற பெயரை மேற்கொண்டனர் என்றும் கூறலாம்.இந்தியாவுக்கு வருமுன்னரே பாரசீகத்தில் அவர்களிடையே பூசலேற்பட்டு, ஒரு பிளவும் உண்டாயிற்று. ஒரு சாரார் அசுரரை வணங்கித் தேவரைப் பழித்தனர். அவர்கள் பாரசீகத்திலேயே தங்கினார்கள். மற்றொரு சாரார் தேவர்களை வணங்கி அசுரர்களைப் பழித்தனர். அவர்களே இந்தியாவுக்கு வந்து, பாஞ்சாலத்தில் தங்கி, இருக்கு வேதத்தை உருவாக்கினார்கள். ஆரியர் இந்தியாவுக்கு வந்த காலம் கி.மு. 3000 என்றும், கி.மு.1500 என்றும் பலவாறாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் ஆரியர் முன்னேற்றத்திலும் நாகரிக வளர்ச்சியிலும் நாம் நான்கு படிகளைக் காணலாம். முதற்படியில் ஆரியர் பாஞ்சாலத்தில் தங்கிப் பழங்குடியினருடன் மும்முரமாகப் போராடி, அவர்கள் நகரங்களை அழித்தனர். பழங்குடியினர் மொழியும் நாகரிகமும் அவர்களுக்குப் புரியாதவையாயிருந்தன. இரண்டாவது படியில் கங்கை யமுனைத் தலைநிலத்தில் அவர்கள் தம்மவருடனும் பழங்குடியினருடனும் பல வகையாகப் பிரிந்தும் கூடியும் போராடியும் கலந்தும் வாழ்ந்தார்கள். இருக்கு வேதம் நீங்கிய யசுர், சாமம், அதர்வணம் என்னும் மூன்று வேதங்களும், இதிகாசம் இரண்டுள் ஒன்றான மாகாபாரதமும்

இவ்விடத்திலேயே, புதிய நாகரிக நிலத்தில் எழுந்தன.

மூன்றாவது படியிலேதான் ஆரியரும் பழங்குடியினரும், பேரளவில் கங்கை வெளியில் கலந்து, புதிதாக ஓர் இந்திய ஆரிய நாகரிகத்தை வளர்த்தனர். இந்நாகரிகமே வரலாற்றுக் காலத்தில் இந்தியாவில் ஆரிய நாகரிகமெனச் சிறப்பிக்கப்பட்டது. இதன் தாயகம், கங்கைப்பகுதி; தலைமையிடம், காசி: இவ்விரண்டும் இன்றளவும் ஆரியர் உள்ளத்தில் முதல் இடம் பெற்றுள்ளன.