பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

||-

அப்பாத்துரையம் - 12

கங்கை வெளியில் பழங்குடி மக்கள் மொழியுடனும் பண்புடனும் ஆரியர் மொழி கலந்து மாற்றமடைந்து, பேச்சு வடிவில் இன்றைய இந்தி, வங்காளி முதலிய தாய்மொழிகளின் பண்டை வடிவங் களான பிராகிருத; பாலி மொழிகளாயின. அவற்றுடன் வேதமொழியும் பலபடியாக மாறி, வடவிந்தியாவின் பண்பட்ட இலக்கிய மொழியாகிய சமஸ்கிருதமாயிற்று.

ஆரியர் வரவுக்குப் பின் வடஇந்தியாவில் எழுந்த முதற்பேரரசு, கங்கை வெளியின் கீழ்ப்பகுதியில் எழுந்த மகதமே. கி.மு.7-ஆம் நூற்றாண்டில் இதைச் சிசுநாகர் என்ற மரபினர் ஆண்டு வந்தனர்.

ஆரியரின் நான்காவது படி முன்னேற்றம், கங்கை வெளியிலிருந்து அவர்கள் இந்தியா முழுவதும் சிறிது சிறிதாகப் பரவியது ஆகும். மேற்கிந்தியாவில் அவர்கள் முன்னேறியது போல, இப்போது அவர்கள் பேரளவிலோ, போர் செய்தோ முன்னேறவில்லை; தங்கள் புதிய நாகரிகத்துடன் தனி மனிதராய்ப் பரவித் தங்கள் நாகரிகத்தைப் பரப்பினார்கள். இக்காலத்துக்குரிய அவர்கள் நூல் இராமாயணம். இதுவே சம்ஸ்கிருதத்தின் முதல் பண்பட்ட இலக்கிய நூல் அல்லது காவியம் ஆகும்.

உபநிடத இயக்கம்

கங்கை வெளி நாகரிகக்காலத்தில், அதாவது கி.மு. 800ல் வடநாட்டு மன்னரவையிலிருந்து எழுந்த இயக்கமே. உபநிடத இயக்கம் ஆகும். தொடக்கத்தில் சனகர், சனற்குமாரர் முதலிய மன்னர்களிடையேயும் மன்னவை அறிஞர்களிடையேயும் அஃது ஆராய்ச்சி வடிவில் எழுந்தது. ஆரிய முனிவர் அதனை மன்னர்களிடமிருந்து கற்று, மாநிலமெங்கும் கொண்டு சென்றனர். இதன் பயனாக வேதங்களைப் பற்றிய ஆராய்ச்சியும் எழுந்தது. ஒரு புறம் வேதங்களின் மொழி, யாப்பு, இசை, காலக்கணிப்பு முதலிய கூறுகள் ஆராயப்பட்டு, வேதாங்கங் களாயின. மற்றொரு புறம், வேதத்திற்கான விளக்கவுரைகள், ஆராய்ச்சிகள் எழுந்து, பிராமணங்களாகவும், ஆரணியகங் களாகவும், உபநிடதங்களாகவும் விரிவுற்றுப் பரவின. ஆராய்ச்சிக்காக காடுகளில் வாழ்ந்த முனிவர்களே ஆரணியகங் களை ஆக்கினர் கற்றவர் குழுக்களால் (உபநிஷத்துக்கள் ஆ