இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
37
வாயிலாக) ஏற்பட்ட உபநிடதங்களுள், முப்பத்திரண்டே இக்காலத்திலிருந்து நமக்கு எட்டியவை என்று குறிக்கப்படு
கின்றன.
இவ்வுபநிடதங்கள் வேதம், வேள்வி, வேதத் தெய்வங்கள் ஆகிய வற்றிலிருந்து தொடங்கி, கடவுள், உலகம், ஒழுக்கம், உயிர், சாதி வேறுபாடு, சுவர்க்க நரகம் ஆகிய எல்லாவற்றையும் பற்றித் தங்கு தடையற்ற ஆராய்ச்சிகள் நிகழ்த்தித் தம் தற்காலிக முடிவுகளையும் தெரிவித்தன. ஜாபால உபநிடதம், 'சாதி உயர்வு தாழ்வு ஒழுக்கத்தால் ஏற்படுவது; பிறப்பினாலன்று.' என்பதை நிலை நாட்டியுள்ளது.
"எழுமின், விழிமின், வேண்டும் நலங்களை முயன்று பெறுமின்!' என்ற எழுச்சியுரை, கடோபநிடதம் தரும் வாசகம் இதுவே, இந்தியாவின் அருட்செல்வத்தை அமெரிக்கா வரை காண்டு பரப்பிய விவேகானந்த அடிகளின் குறிக்கோளாய் அமைந்தது.
பண்பும் பயனும்
இந்திய நாகரிகத்துக்கும் உலக நாகரிகத்துக்கும் உபநிடத இயக்கங்களாலும், உபநிடதங்களாலும் கிட்டிய நன்மைகள் எண்ணற்றவை. உலகின் முதல் முதல் உரைநடை நூல்களும், முதல் ஆராய்ச்சி நூல்களும் இவையே என்னலாம். இவை கடந்த ஆராய்ச்சிகளையும் இவற்றினும் பரந்த ஆராய்ச்சிகளையும் இன்றும் எந்நாட்டிலும் காண்பதரிது. இவை நம்பிக்கை அடிப்படையான சமயத்துறையில் பகுத்தறிவு ஒளிவிளக்கத்தைப் பாய்ச்சியுள்ளன; சமூகச் சீர்திருத்தத்தில் கருத்தூன்றி உள்ளன. முடிந்த மெய்ம்மை, வாழ்வின் முடிந்த முழு இலக்கு ஆகியவற்றில் இவை உணர்வு கொளுத்தியுள்ளன.
உபநிடதங்களால் இந்தியாவின் சமயவாழ்வில் ஆயிர ஆண்டுக்காலம் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. ஒவ்வோர் ஆசாரியரும் ஒவ்வொரு கொள்கையையும் கட்சியையும் சமயத்தையும் வளர்த்தனர். இந்தியா ஒரு சமயப் பொருட்காட்சி மேடையாயிற்று. இந்தச் சமய, கட்சி, கொள்கை வேறுபாடுகளுள் ஒரு சிலவே நம்மை வந்தடைந்துள்ளன. அச்சிலவற்றுள்ளும் ஆசீவக சமயம் போல நமக்குப் பெயர்