பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

உலக இலக்கிய மரபு

39

புத்த சமண சமயங்கள் இந்தியாவுக்கு அக்காலத் தாய் மொழிகளாகிய பாலி, பிராகிருதம் ஆகியவற்றிலும், சம்ஸ்கிருதத்திலும் பேரளவான இலக்கியம் அளித்துள்ளன. வை இன்று ஆசியாவின் மூலத்தாயக இலக்கியங்களாகி யுள்ளன. இவை தவிர, இந்தியாவில் தொன்றுதொட்டு வழங்கிவந்த கதை மரபுகளைத் தொகுத்து இப்புத்த சமண இலக்கியங்களே உலகுக்கு உதவின. கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் பண்டைப் பெருங்கவிஞனான குணாட்டியன் இயற்றிய பிருகத் கதையும், மறுபுறம் பஞ்சதந்திரமும், இவற்றைச் சார்ந்து பிற்காலத்திலெழுந்த கிளிக்கதை, பதுமைக் கதை, விக்கிரமாதித்தன் கதை ஆகியவையும் இக்கதை இலக்கியத்தின் மரபில் வந்தவைகள். மேனாடுகளில் ஈஸாப்பு,பொக்காச்சியோ, சாஸர் முதலிய பெருங்கலைஞர்களின் கதை இலக்கியத்துக்கும், கீழ்நாடுகளின் அராபிய இராக்காலக் கதைகளுக்கும் மூல இலக்கிய மரபுகள் இவைகளே என்று உலகக்கதை மரபு ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

இக்கதைகளை இந்தியாவிலிருந்து கொண்டு சென்றவர்கள், ன்றளவும் உலகெங்கும் நாடோடிகளாகவே அலைந்து திரிகின்ற ஜிப்ஸிகள் என்ற கூட்டத்தவர்களே என்று கருத இடமுண்டு. ஏனெனில், ஜிப்ஸிகள் பல நாட்டு மொழிகளும் பயின்று கலந்து பேசினாலும், அவர்கள் மொழியின் அடிப்படை இந்தியாவிலுள்ள இந்தி மொழியையே ஒத்துள்ளது என்பதை அறிகிறோம்.

இந்து மதம்

உபநிடத ஆராய்ச்சியின் பயனாகவே, கி.பி. 8-ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் இந்துமத சமயாசாரியர் மதச் சார்பான அறிவுக் கருத்துக்களை ஒருமுகப்படுத்தி, சித்தாந்தங்களாக்க முடிந்தது. அத்துடன் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் புத்த சமயம் நலியத் தொடங்கியபின், அதன் கலைகளையும் கருத்துக்களையும் காலத்துக்கேற்ற புத்துருவில் அமைத்து, கலைஞர்கள் புதிய இந்து சமயக் கலைகளை வளர்த்தார்கள். மக்கள் பழக்கவழக்க மரபுகளைக்