பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

அப்பாத்துரையம் - 12

கௌடில்லியர், மனு, ஆபஸ்தம்பர், கௌதமர் என்பவர்கள் தங்கள் புதிய சமுதாயக் கருத்துக்களுக்கேற்ப வகுத்து, அரசியல் நூல்களும் சுமிருதிகள் என்ற சட்ட நூல்களும் இயற்றினார்கள். பண்டை உரோம நாட்டுச் சட்ட நூல்களைப் போல, இவை மனித நாகரிகத்தின் பழங்கால மரபுகளைக் காட்ட மிகுதியும் உதவுகின்றன.

திரும்பு கட்டம்; கி.பி. 3- ஆம் நூற்றாண்டு

கி.பி. 3-ஆம் நூற்றாண்டு முதல் 5-ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலம், இந்தியாவின் வரலாற்றிலுள்ள திரும்பு கட்டங்களுள் ஒன்றாகும். இத்திரும்பு கட்டத்துக்குத் தென்னாடே பேரளவில் காரணமாயிருந்தது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வரை சங்க வரை சங்க இலக்கியங்களும் தென்னாட்டு மரபுகளும் வடநாட்டின் புதிய ஆரிய நாகரிகத்துடன் பெரிதும் கலவாமலே இருந்து வந்தன. அத்துடன் சேர சோழ பாண்டியர் என்ற முடியுடை மன்னர் தோன்றித் தமிழகத்திலும், அது கடந்து கடல் கடந்த நாடுகளிலும், சில சமயம் வடவிந்தியாவிலும் தம் ஆட்சியைப் பரப்ப முயன்றனர். பாண்டி நாட்டில் வடிம்பலம்ப நின்ற பாண்டியன், கிட்டத்தட்டக் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில், கடற்படையுடன் சாவக நாட்டின்மீது படையெடுத்து, அதை அடக்கியாண்டான். கி.மு. முதல் நூற்றாண்டில் சேர அரசனொருவன் மேல்கடற்கரையில் கடல் வாணிகரைச் சூறையாடிய கடம்பர் என்ற கொள்ளைக் கூட்டத்தாரையடக்கி, அவர்கள் மூலதனமாயிருந்த வெள்ளைத் கைக்கொண்டான். சோழன் கரிகாலன், இலங்கையையும் இந்தியாவின் பெரும்பகுதியையும் அடக்கி, மன்னர் பலரைத் தனக்குத் திறை செலுத்தும் சிற்றரசராக்கினான். இமயத்தில் சோழர் புலிக்கொடி நாட்டியதை அடுத்து, பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாண்டியரின் மீனக் கொடியையும், சேரன் நெடுஞ்சேரலாதன் சேரரின் வில் கொடியையும் அதில் பொறித்தனர். இவர்களனைவரின் புகழையும் தாண்டிச் சேரன் செங்குட்டுவன் வடநாட்டின்மீது படையெடுத்துப் பெரும்போராற்றிக் கண்ணகி சிலையை மன்னர் தலைமீது வைத்துக் கொணர்ந்தான்.

தீவைக்